'ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணித்தால் இனி...' வருகிறது சட்ட திருத்தம்

ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தால் இனி அபராதம் மட்டுமே செலுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

'ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணித்தால் இனி...' வருகிறது சட்ட திருத்தம்
கோப்பு படம்
  • Share this:
இந்தியாவில் சிறுசிறு குற்றங்களுக்கும் அபராதம், சிறை அல்லது இரண்டும் என்ற தண்டனை நடைமுறையில் உள்ளது. சிறு குற்றங்களுக்கு இது அதிகபட்ச தண்டனை என்ற கருத்து பல காலமாக நிலவி வருகிறது இதனை சரி செய்யும் விதமாக அனைத்து அமைச்சகங்களுக்கும், அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

 


அதில் எந்தெந்த சிறு குற்றங்களுக்கு அபராதம் மட்டுமே விதித்தால் போதும் என்பதை பரிந்துரை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது அபாய சங்கிலியை பிடித்து இழுப்பது பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவது உள்ளிட்ட 16 குற்றங்களை ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.

இதனால் விரைவில் இந்த குற்றங்களுக்கு அபராதம் மட்டுமே விதித்தால் போதும் என்ற சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... ரயிலில் கேட்பாரற்று கிடந்த ₹ 1.44 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள்
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading