Home /News /national /

டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறி பயணிக்க முடியும்.. ஆனால்...

டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறி பயணிக்க முடியும்.. ஆனால்...

கோப்புப் படம்

கோப்புப் படம்

Train travel without ticket | பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்குவது, ஒரு நபருக்கு ரயிலில் செல்வதற்கான உரிமையை வழங்குகிறது. நீங்கள் எந்த இடத்தில், அதாவது ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்குகிறீர்களோ, அந்த இடத்தில் இருந்து நீங்கள் செல்லும் இடத்திற்கான டிக்கெட் விலை பயணத்தில் இருக்கும்போதே நிர்ணயிக்கப்படும்.

மேலும் படிக்கவும் ...
    ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வதை ‘வித்-அவுட்’ என்று பொதுவாகக் கூறுவார்கள். சாதாரண மின்சார ரயில்கள் என்றாலும் சரி, தொலைதூர பயணத்துக்காக எக்ஸ்பிரஸ் ரயில்கள் வண்டிகள் என்றாலும் சரி, அதற்குரிய டிக்கெட்டுகளை வாங்க வேண்டியது அவசியம். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், அபராதம் முதல் சில மாதங்களுக்கு சிறை வரை தண்டனை உண்டு.

    ஆனால், டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணம் செய்யலாம் என்பது தெரியுமா?

    அவசர பயணத்தில் ரயில் கிளம்பும் சில மணிநேரங்கள் முதல் சில நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் தேவைப்படும் சூழல் பலருக்கும் ஏற்படும். இறுதி நேரத்தில் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாது. அதே போல, தட்கல் டிக்கெட்டும் பல நேரங்களில் கிடைக்காது. இந்த சூழலில் பதட்டப்படாமல், ரயிலில் டிக்கெட் ரிசர்வேஷன் இல்லாமல் பயணிக்கலாம் என்ற ஒரு புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றால் நீங்கள் நடைமேடை டிக்கெட் எனப்படும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்க வேண்டும். ரயில்வேயின் சிறப்பு விதிப்படி, அந்த பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை வைத்துக் கொண்டே நீங்கள் ரயிலில் பயணம் செய்யலாம்.

    பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கி, ரயிலில் பயணம் :

    ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நீங்கள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றாலும் கூட, குறிப்பிட்ட ரயிலில் நீங்கள் பயணம் செய்ய வேண்டுமென்றால், ரயில் நிலைய டிக்கெட் வாங்கி, ரயிலில் செல்லலாம். அதற்கு முன், நிலையத்தில் உள்ள காப்பாளர், அல்லது ரயில் நிலைய அதிகாரியிடம் சர்டிபிகேட் பெற்று உடனே ரயிலில் ஏறிக்கொள்ளலாம்.  அந்த சர்டிபிகேட் தற்காலிகமானதும், டிக்கெட் பரிசோதகர் ஏற்றுக்கொள்வதற்குமானது. உங்கள் சூழலை கருத்தில் கொண்டு இந்த சர்டிபிகேட் உடனே கொடுக்கப்படும்.

    அதன் பின்பு, நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் (Train ticket examiner) சென்று, உங்களுக்கான டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். ரயிலில் சீட் மற்றும் பெர்த் இருந்தால், அதுவும் உங்களுக்கு வழங்கப்படும். அதாவது, டிக்கெட்டை நீங்கள் முன்பதிவு செய்யவில்லை என்றாலும், ரயிலிலேயே வாங்கி பயணத்தை மேற்கொள்ளலாம்.

    Read More : MobiKwik-ல் வெறும் 2 நிமிடங்களில் டூ வீலர் இன்ஷுரன்ஸ்.. க்ளைம் போனஸ் இல்லை, கூடுதல் அம்சங்கள் - முழு விவரம்


    அவசர காலத்தில் ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற சூழலில் இருப்பவர்களுக்காக இந்தியன் ரயில்வே இந்த வசதியை வழங்கியுள்ளது. ஆனால், இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால்,

    * நீங்கள் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கியிருக்க வேண்டும்
    * ரயிலில் ஏறிய பின்பு, TTE இடம் தெரிவித்து, நீங்கள் செல்லும் இடத்துக்கான டிக்கெட்டை வாங்க வேண்டும். TTE ரயிலிலேயே உங்களுக்கான டிக்கெட்டை வழங்குவார்.

    இதன் மூலம், பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்குவது, ஒரு நபருக்கு ரயிலில் செல்வதற்கான உரிமையை வழங்குகிறது என்பது தெளிவாகிறது.

    நீங்கள் எந்த இடத்தில், அதாவது ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்குகிறீர்களோ, அந்த இடத்தில் இருந்து நீங்கள் செல்லும் இடத்திற்கான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படும்.

    ஒரு வேளை, உங்களுக்கு அலாட் செய்ய சீட் அல்லது பெர்த் இல்லை என்றால், TTE உங்களுக்கான ரிசர்வேஷனை மறுக்கலாம். ஆனால், உங்களை ரயிலில் இருந்து இறங்கச் சொல்வதற்கு, உங்கள் பயணத்தை தடுப்பதற்கு அதிகாரம் இல்லை. ரிசர்வேஷன் இல்லாதபோது, கூடுதலாக, ரூ. 250 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    நினைவிருக்கட்டும்: எல்லா வகை ரயில்களிலும், இந்த வசதியானது கிடையாது. இந்த அவசரகால வசதியானது எல்லா சூழலிலும், பயணிக்கு சாதகமாகவும் அமையாது. அதாவது வேண்டுமென்றே டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறினால், டிக்கெட் பரிசோதகர் உங்களுக்கு அபராதம் விதிப்பார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Train

    அடுத்த செய்தி