ஹோம் /நியூஸ் /இந்தியா /

"மக்களின் மனங்களை புரிந்துகொள்ள" இந்தியா முழுவதும் தன்னந்தனியாக ஒரு சைக்கிள் பயணம்.!

"மக்களின் மனங்களை புரிந்துகொள்ள" இந்தியா முழுவதும் தன்னந்தனியாக ஒரு சைக்கிள் பயணம்.!

எனது பயண செலவுகளுக்காக முகக் கவசங்கள் விற்று வருகிறேன். அதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை உணவு மற்றும் பயண செலவுகளுக்காக பயன்படுத்தி வருகிறேன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தியா முழுவதும் சைக்கிளில் தன்னந்தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய மக்களின் எண்ணங்கள் எப்படி உள்ளது? என தான் தெரிந்து கொள்வதற்காக இந்த பயணத்தை தொடங்கியதாக தெரிவித்திருக்கிறார்.

சுமார் 16 மாதங்கள் இலக்காக கொண்டு பெங்களூரில் ஆரம்பித்து ஊட்டி, தேனி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தஞ்சாவூர், சென்னை, ஆந்திரா, பீகார் வழியாக வட கிழக்கு மாநிலங்கள் சென்று அங்கிருந்து மீண்டும் உத்திரப் பிரதேசம், டெல்லி, காஷ்மீர் என அங்கிருந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கோவா, கர்நாடகா என இந்திய எல்லைப் பகுதிகளையொட்டி சைக்கிளில் தன்னந்தனியாக சுற்றிவர உள்ளதாக பெங்களூரை சேர்ந்த 26 வயதான டிப்ளமோ பட்டதாரியான சாய் தேஜா என்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு மேல் பயணம் செய்து பெங்களூரில் இருந்து தேனி, கன்னியாகுமரி ராமேஸ்வரம், தஞ்சாவூர் என சுமார் 1800 கி.மீ.,க்கும் அதிகமான தூரங்களை கடந்து தற்போது சென்னை வந்துள்ளதாகவும், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் பிரியர் என்பதால் அவரை சந்திப்பதற்காக இன்று டிஜிபி அலுவலகம் வந்ததாகவும், ஆனால் டிஜிபி சைலேந்திரபாபு அலுவல் காரணமாக சென்றிருப்பதால் அவரை காண முடியாமல், அடுத்த பயணத்தை சென்னையிலிருந்து தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நியூஸ் 18 -க்கு பேட்டி அளித்த சாய் தேஜா கூறியதாவது-

இந்திய மக்களின் மனங்களை நான் அறிந்து கொள்வதற்காக கடந்த அக்டோபர் மாத இறுதியில் தன்னந்தனியான இந்த சைக்கிள் பயணத்தை தொடங்கினேன். ஒரு மாதத்தில் சுமார் 1800 கிலோ மீட்டர் தூரம் கடந்து, தற்போது சென்னை வந்துள்ளேன். இங்கிருந்து ஆந்திரா, பீகார் வழியாக வட கிழக்கு மாநிலங்கள் செல்லப்போகிறேன். தமிழகத்தில் தற்போது பெய்த மழையில் நான் பல சவால்களை சந்தித்தேன். அவை என்னை மனதளவில் வலுப்படுத்தியது.

பகல் முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து இரவு நேரங்களில் பெட்ரோல் பங்க், கோவில்கள் மற்றும் சாலையோரங்களில் படுத்து உறங்கி பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். பலர் என்னைப் பற்றி அறிந்து எனக்கு பாதுகாப்பு அளித்தும், அடைக்கலம் அளித்து வருகிறார்கள்.

எனது பயண செலவுகளுக்காக முகக் கவசங்கள் விற்று வருகிறேன். அதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை உணவு மற்றும் பயண செலவுகளுக்காக பயன்படுத்தி வருகிறேன்.

தற்போது வரை நான் சந்தித்த மனிதர்கள் அனைவரும் அன்பாக பழகுவதுடன் எனக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் இந்திய மக்கள் குறித்து நான் கேள்விப்பட்ட அனைத்து கெட்ட எண்ணங்களையும் இந்த பயணம் தகர்த்துள்ளது.

காசு, பணங்கள் மட்டுமே தெரிந்த எனக்கு தற்போது மக்களின் மனங்கள் புரிய ஆரம்பித்துள்ளது; இந்த சுற்றுப்பயணம் அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தை என்னால் வெற்றிகரமாக முடிக்க முடியும்.

இவ்வாறு கூறிய அந்த இளைஞர் ஆந்திரா நோக்கி செல்ல ஆயத்தமானார்.

Published by:Esakki Raja
First published:

Tags: Bicycle, Travel