Home /News /national /

சரத் பவார் வீட்டின்முன் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - மும்பையில் பரபரப்பு

சரத் பவார் வீட்டின்முன் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - மும்பையில் பரபரப்பு

சரத் பவார் வீட்டின் முன்பு நடந்த போராட்டம்

சரத் பவார் வீட்டின் முன்பு நடந்த போராட்டம்

இதுபோன்ற ஒரு காட்சியை தன் வாழ்நாளில் சந்தித்தில்லை. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிரா காவல்துறைக்கு நன்றி - சரத்பவார் மகள் சுப்ரியா

மகாரஷ்டிரா மாநிலத்தின் 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வீட்டின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு ஆட்சி நடத்துகிறது. இந்த கூட்டணி அமைவதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் சரத் பவார். மகாராஷ்டிரா அரசின் செயல்பாடுகளின் முக்கிய புள்ளியாக சரத் பவார் கருதப்படுகிறார்.

இந்நிலையில், மாகாரஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்திவருகின்றனர். தங்களின் கோரிக்கைகள் எதையும் அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் மாநில அரசு ஊழியர்களுக்கு நிகரான அனைத்து பலன்களும் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இதையும் படிங்க - அதிகாலையில் வெடித்த ஏசி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்
இந்த போராட்டம் தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரும் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


நீதிமன்றம் விதித்த காலக்கெடுக்குள் பணிக்கு திரும்பும் ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என மாகாரஷ்டிரா போக்குவரத்துத்துறை அமைச்சர் அனில் பராப் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், தங்களின் கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஆத்திரத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தெற்கு மும்பையில் உள்ள சரத் பவாரின் இல்லத்தின் முன் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை சரத் பவாரின் மகளான எம்பி சுப்ரியா சூலே சமாதானப்படுத்த முயன்றார்.




இருப்பினும் அவர்கள் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த பேரிகேடுகளை தள்ளியும், வீட்டின் முன் காலணிகளை வீசியும் சிலர் வீட்டிற்குள் நுழைய பார்த்தனர். அவர்களை கடுமையான போராட்டத்திற்குப்பின் காவல்துறை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


இதையும் படிங்க - மீண்டும் தலைதூக்கம் கொரோனா - 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இதையடுத்து சரத் பவாரின் இல்லம் களேபரமாகக் காட்சியளித்தது. இதுபோன்ற ஒரு காட்சியை தன் வாழ்நாளில் சந்தித்தில்லை. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிரா காவல்துறைக்கு நன்றி என சுப்ரியா சூலே தெரிவித்தார்.

போராட்ட காலத்தில் 120க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இது தற்கொலை அல்ல அரசு செய்த கொலை. ஆளும் அரசு எங்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மாநில போக்குவரத்து கழகத்தை அரசுடைமை ஆக்க வேண்டும். அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்களின் இழப்புக்கு சரத் பவார் பொறுப்பேற்க வேண்டும்" என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் ஆவேசமாகக் கூறினார்.

இந்த போராட்டத்தின் பின்னணியில் அந்நிய சக்திகள் இருப்பதாகவும், மாநில அரசை சீர்குலைய வைக்கவே இதுபோன்ற சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக மாகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் பாட்டில் ட்வீட் செய்துள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Maharashtra, Mumbai

அடுத்த செய்தி