இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்... கச்சிகுடாவில் விபத்து... பலர் காயம்...!

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்... கச்சிகுடாவில் விபத்து... பலர் காயம்...!
விபத்துக்குள்ளான ரயில்கள்
  • News18
  • Last Updated: November 12, 2019, 8:16 AM IST
  • Share this:
ஹைதராபாத் அருகே கச்சிகுடா ரயில் நிலையத்தில் எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் மின்சார ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் குர்னூல் - செகுந்தராபாத் இண்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை 10.30 மணிக்கு பிளாட்பாரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிரே அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் மின்சார ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது.

ரயில் நிலையத்தின் உள்ளே என்பதால், ரயில்கள் குறைந்த வேகத்தில் இயங்கியுள்ளன. இதனால், பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.


சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் இயங்கும் பல ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
First published: November 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...