Home /News /national /

அக்னிபாத் எதிரான போராட்டத்தில் பீகாரில் 3 ரயில் பெட்டிகள் எரிப்பு

அக்னிபாத் எதிரான போராட்டத்தில் பீகாரில் 3 ரயில் பெட்டிகள் எரிப்பு

3 ஆம் நாளாக பீகாரில் எரிக்கப்பட்ட  ரயில்

3 ஆம் நாளாக பீகாரில் எரிக்கப்பட்ட ரயில்

protesters set fire on 3 coaches: அக்னிபாத் எதிரான 3 நாள் தொடர் போராட்டத்தில் இன்று காலை பீகாரில் 3 ரயில் பெட்டிகள் எரிப்பு.

கடந்த ஜூன் 14 ஆண்டு அரசு வெளியிட்ட அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு சேவைகளில் உருவாக்கிய குறுகிய கால ஆட்சேர்ப்புகளுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் பீகாரில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்துள்ளது.

வியாழன் பிற்பகுதியில் அரசாங்கம் இத்திட்டத்தின் கீழ் இரண்டு வருட வயது தளர்வை அளிப்பதாக செய்து வெளியிட்டிருந்தனர். அதையும் எதிர்த்து நேற்று மாலை போராட்டம் நடைபெற்றது. அவர்களைத் தடுக்கும் பணியில் காவல் துறை ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் சுமார் 180 காயமடைந்துள்ளனர்.



இந்நிலையில் போராட்டக்காரர்கள் இன்று காலையிலேயே சமஸ்திபூர் நகரில் சாலைப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தி  போராடி வருகின்றனர். பக்சர் மற்றும் பாட்னா-ஹவுரா-கயா-பகல்பூர் பிரிவில் பாட்னா-புது தில்லி பிரதான ரயில் பாதையைத் தடுத்து மறியல் செய்தனர்.

விக்ரம்சிலா விரைவு ரயிலின் குளிரூட்டப்பட்ட மூன்று பெட்டிகள் சூறையாடப்பட்டு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, தீவைக்கப்பட்டது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் போராட்டக்காரர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். தீயை கட்டுப்படுத்துவதற்குள் அந்த மூன்று பெட்டிகளும் பெரும்பாலும் எரிந்து நாசமாகியுள்ளது. அர்வால், ககாரியா, போஜ்பூர் மற்றும் லக்கிசராய் மாவட்டங்களிலும் போராட்டங்கள் பதிவாகியுள்ளன. மேலும் தும்ரான் ரயில் நிலையத்தில் வாகன டயர்கள் எரிக்கப்பட்டு போராட்டம் செய்துள்ளனர்.

இது மட்டுமின்றி அண்டை மாநிலமான உத்திரபிரதேசம், தலைநகர் டெல்லியிலும் இன்று காலை முதல் கலவரங்களும் போராட்டங்களும் மறியல்களும் நடந்து வருகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Bihar, Protest Turn Violent

அடுத்த செய்தி