Breaking நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்வு!

Breaking நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்வு!
  • News18
  • Last Updated: December 31, 2019, 7:35 PM IST
  • Share this:
நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணங்களைப் பகுப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். அதனையடுத்து, ரயில்வே கட்டணம் உயர்த்தப்படும் என்ற சமிஞ்சை தெரிந்தது.



இந்தநிலையில், இந்திய ரயில்வே கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, புறநகர் ரயில்களுக்கு கட்டண உயர்வு இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசி இல்லாத பேசஞ்சர் ரயில்களுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விரைவு ரயில்களுக்கு(Mail/Express) ரயில்களுக்கு இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி(Sleeper class), முதல் வகுப்பு ஆகிய குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து வகை ஏ.சி வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 4 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

Also see:
First published: December 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்