உ.பி.க்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற சிறப்பு ரயில் - பரிதவிக்கும் தொழிலாளர்கள்

ரயில்வே துறையின் குழப்பத்தால் தற்போது உத்தரப்பிரதேசம் செல்ல வேண்டிய தொழிலாளர்கள், ஒடிசாவில் பரிதவித்து நிற்கின்றனர்.

உ.பி.க்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற சிறப்பு ரயில் - பரிதவிக்கும் தொழிலாளர்கள்
சிறப்பு ரயில்
  • News18
  • Last Updated: May 23, 2020, 2:42 PM IST
  • Share this:
மஹாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்குச் செல்ல இருந்த ரயில், ஒடிசா மாநிலத்திற்குச் சென்றுள்ளதால் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிக்ல் நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

மாநிலங்களுக்கிடையே புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக வேலையிழந்துள்ள நிலையில், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மஹாராஷ்டிரா மாநிலம் வசாய் ரயில் நிலையத்தில் இருந்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் புறப்பட்டது. முற்றிலும் வேறு திசையில் பயணித்த ரயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு வந்து சேர்ந்துள்ளது.


உத்தரப்பிரதேசம் செல்ல வேண்டிய தொழிலாளர்கள், ஒடிசாவுக்கு வந்த நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் இது தொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். எனினும், அந்த ரயில் ரூர்கேலா செல்ல வேண்டியதுதான் என்று அதிகாரிகள் குழப்பமான பதிலை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரயில்வே, சிறப்பு ரயில்கள் வழக்கமான வழித்தடங்களில் இல்லாமல், சில வழித்தடங்கள் மாற்றி இயக்கப்படுகின்றன. ரயில் ஓட்டுநர் குழப்பமடைந்து ரூர்கேலா வழியாக ரயிலை இயக்கியிருக்கலாம் என்று கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளது. எனினும், இது தொடர்பாக ரயில் இருந்த தொழிலாளர்களிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ரயில்வே துறையின் குழப்பத்தால் தற்போது உத்தரப்பிரதேசம் செல்ல வேண்டிய தொழிலாளர்கள், ஒடிசாவில் பரிதவித்து நிற்கின்றனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading