வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளுக்கு கட்டுப்பாடு தேவையில்லை - டிராய்

வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளுக்கு கட்டுப்பாடு தேவையில்லை - டிராய்

 • News18
 • Last Updated :
 • Share this:
  வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஸ்கைப் போன்ற ஓடிடி செயலிகளுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை என்று இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

  வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற செயலிகள் மூலம் இலவச வாய்ஸ் கால் மற்றும் குறுஞ்செய்தி சேவை வழங்கப்படுவதால் தங்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக செல்போன் சேவை வழங்குபவர்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

  இத்தகைய செயலிகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம், ஸ்கைப், டெலிகிராம், கூகுள் சாட், ஜூம் போன்ற செயலிகள் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பயனாளர்கள் அழைப்பை இடைமறிக்க கட்டாயப்படுத்தினால், அத்தகைய சேவைகளை வழங்கும் செயலிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  Also read... Gold Rate | தடாலடியாக அதிகரித்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?

  தற்போதைய சூழலில் இணையவழியில் வாய்ஸ்கால், குறுஞ்செய்தி சேவை வழங்கும் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு என்று தனியாக ஒழுங்குமுறைகளை கொண்டுவருவது தேவையற்றது என்றும் டிராய் விளக்கமளித்துள்ளது.

  அதேநேரம் டிராயின் இந்த அறிவிப்புக்கு செல்லுலார் சேவை கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும்வரை தொலைதொடர்பு சேவை வழங்குபவர்களுக்கு பாதகமான சூழலே இருக்கும் என்று செல்லுலார் ஆப்ரேட்டர் கூட்டமைப்பின் இயக்குநர் கோச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: