வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம், தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் கன
மழை பெய்து வருகிறது.
திருப்பதி திருமலையில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பதி நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
திருப்பதியில் உள்ள ஏர் பை பாஸ் ரோடு, யுனிவர்சிட்டி ரோடு ஆகிய பகுதிகள் உட்பட அனைத்து சாலைகளிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதவிர திருப்பதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. புயல் சின்னம் மேலும் வலுவடையும் நிலையில் மேலும் அதிகன மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. இதனால் திருப்பதி நகரில் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக செல்வதற்கு பயன்படுத்தப்படும் மலை பாதைகளும் கனமழை காரணமாக நேற்று முதல் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி - திருமலை இடையேயான சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருமலை - திருப்பதி இடையேயான சாலை போக்குவரத்து குறித்து பிறகு அறிவிக்கப்படுமு் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.