• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கடமையை செய்ததற்காக அடிவாங்கிய போலீஸ்காரர் - இணையத்தில் வெளியான வீடியோ

கடமையை செய்ததற்காக அடிவாங்கிய போலீஸ்காரர் - இணையத்தில் வெளியான வீடியோ

போலீஸை தாக்கும் இளைஞர்

போலீஸை தாக்கும் இளைஞர்

போதை ஆசாமி தடியால் காவலர் தலையில் பலமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:

    மதுபோதையில் போக்குவரத்து காவலரை இளைஞர் ஒருவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    ஜார்க்கண்ட் மாநிலத்தில் போக்குவரத்தை சரிசெய்துக்கொண்டிருந்த காவலரை இளைஞர் ஒருவர் தாக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. போக்குவரத்தை விதிகளை மீறும் பொதுமக்களை, போலீசார் சில சமயங்களில் அடித்து விரட்டுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், விதிகளை மதிக்கச் சொன்னதற்காக அந்த இளைஞர் போலீஸை தாக்கியது தெரியவந்துள்ளது.


    பலோடா பசார் என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அனிஷ் கான் என்ற இளைஞர் மதுபோதையில் சாலையில் திரிந்து கொண்டிருந்தார். பரபரப்பான சாலையில் இளைஞர் மதுபோதையில் சுற்றித்திரிவதை பார்த்த போக்குவரத்து காவலர் அந்த நபரை ஓரமாக செல்லும்படி கூறினார். போதையில் இருந்த ஆசாமி என்னையே ஓரமாக போக சொல்லுகிறாயா என ஆத்திரமடைந்து போக்குவரத்து போலீஸாரை தாக்கத் தொடங்கினார்.


    அந்த போதை ஆசாமி தடியால் காவலர் தலையில் பலமாக தாக்கினார்.இதில் அந்த தடி இரண்டாக உடைந்தது. எனினும் அமைதியின் மறு உருவமாக திகழ்ந்த போக்குவரத்து காவலர் திருப்பி தாக்கவில்லை. இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் படம்பிடித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. போதை நபர் தாக்கியபோதும் பதிலுக்கு தாக்காமல் அமைதி காத்த போலீசுக்கு, காவல்துறை அதிகாரிகள் வெகுமதி அளித்து பாராட்டினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: