விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: மோடி, அமித் ஷா-வின் சதியே காரணம்- காங்கிரஸ் கடும் விமர்சனம்

காங். தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா.

விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததற்கு நேரடியாக அமித் ஷா தான் பொறுப்பு.

 • Share this:
  ஜனவரி 26ம் தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் போலீஸார், விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

  இதனையடுத்து இது உளவுத்துறையின் தோல்வி என்று வர்ணித்த காங்கிரஸ், பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை நீக்க வேண்டும் என்று சாடியுள்ளது.

  இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறும்போது, “சட்டம் ஒழுங்கு, மற்றும் உளவுத் தோல்விகளை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும், அல்லது அவரை மோடி பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

  வன்முறையாளர்களை விடுத்து விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது மத்திய அரசு வழக்குத் தொடுத்து வருகிறது. இது மோடி அரசின் சதியையும் சூழ்ச்சியையும் அம்பலப்படுத்துகிறது.

  விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததற்கு நேரடியாக அமித் ஷா தான் பொறுப்பு, உளவுத்துறை எச்சரித்தும் விவசாயிகள் பேரணியில் வன்முறையாளர்கள் புகுந்திருக்கின்றனர் என்றால் அதற்கு அமித் ஷா தான் காரணம். எனவே அவர் உள்துறை அமைச்சராக இருக்க உரிமையற்றவர்.

  அவர் தன் பதவியை உடனே ராஜினாமா செய்வது அவசியம்.

  பிரதமர் நரேந்திர மோடி அமித் ஷாவை நீக்கவில்லை எனில் அவரும் சதியின் ஒரு அங்கம் என்றே கருத வேண்டி வரும்.

  முதன் முதலாக ஒரு அரசு செங்கோட்டையைக் காக்க தவறி விட்டது. விஷமிகள் செங்கோட்டை உள்ளே புகுந்தனர், போலீஸார் நாற்காலிகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்” என்றார் சுர்ஜேவாலா.
  Published by:Muthukumar
  First published: