“உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; உட்காருங்கள்” - ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை சாடிய டி.ஆர் பாலு

news18
Updated: August 6, 2019, 4:25 PM IST
“உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; உட்காருங்கள்” - ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை சாடிய டி.ஆர் பாலு
டி.ஆர் பாலு | ஓ.பி ரவீந்திரநாத் குமார்
news18
Updated: August 6, 2019, 4:25 PM IST
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா குறித்த விவாதத்தில் டி.ஆர் பாலு பேசிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட தேனி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் குமாரை, “உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; உட்காருங்கள்” என்று டி.ஆர் பாலு கூறினார்.

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில், மசோதாவை இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மசோதா மீது காங்கிரஸ், திரினாமுல், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர்.

மசோதா மீது பேசிய திமுக எம்.பி டி.ஆர். பாலு, ஜனநாயகத்திற்கு விரோதமாக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?; மாநில அரசை நகராட்சி போல மத்திய அரசு நடத்த முயற்சிக்கிறது” என்றார்.
Loading...டி.ஆர் பாலு பேசும் போது பாஜக எம்.பி.க்கள் சிலர் குறுக்கிட்டனர். அப்போது தேனி அதிமுக எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் குமாரும் குறுக்கிட்டார். அப்போது, “இது முதுகெலும்பு உள்ளவர்கள் பேசும் இடம்; உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; உட்காருங்கள்” என்று டி.ஆர் பாலு ஆவேசமாக கூறி தனது பேச்சை தொடர்ந்தார்.

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...