காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டத் தடை நீக்கம்! ஆளுநர் அறிவிப்பு

news18
Updated: October 8, 2019, 10:54 AM IST
காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டத் தடை நீக்கம்! ஆளுநர் அறிவிப்பு
காஷ்மீர்
news18
Updated: October 8, 2019, 10:54 AM IST
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை முதல் நீக்கப்படுகிறது என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவு மூலம் மத்திய அரசு நீக்கியது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு ஒரு சில நாள்கள் முன்னதாகவே காஷ்மீரிருக்கு சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.

அதன்பிறகு, அமர்நாத் யாத்திரையும் ரத்து செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அந்தஸ்து ரத்தால் கலவரம் ஏற்படாமல் இருப்பதற்காக காஷ்மீர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுவந்தது.


சுமார் 64 நாள்கள் தடைக்குப் பிறகு, வரும் வியாழக் கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுகிறது என்று ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த ஆளுநரின் செய்தித் தொடர்பாளர், ‘அக்டோபர் 24-ம் தேதி ப்ளாக் டெவலப்மெண்ட் தேர்தல் நடைபெறும். கட்சியில் சார்பில் போட்டியிட விரும்புவர்கள் சிறையிலுள்ள கட்சித் தலைவர்களை சிறையில் சென்று சந்திக்கலாம். அக்டோபர் 5-ம் தேதியிலிருந்து மாலை 6 மணி முதல் 8 மணி வரை பாதுகாப்பு குறித்து ஆளுநர் ஆலோசனை செய்வார்’ என்று தெரிவித்தார்.

Also see:

Loading...

First published: October 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...