முகப்பு /செய்தி /இந்தியா / நாட்டின் மொத்த வனப்பரப்பு அளவு 2,261 சதுர கிமீ அதிகரித்துள்ளது - மத்திய அரசு தகவல்

நாட்டின் மொத்த வனப்பரப்பு அளவு 2,261 சதுர கிமீ அதிகரித்துள்ளது - மத்திய அரசு தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாட்டின் மொத்த வனம் மற்றும் மரங்களின் பரப்பு 2,261 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளதாக இந்திய வனப்பரப்பு நிலை அறிக்கை கூறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்களில் சமீப ஆண்டுகளாக காற்றுமாசு பிரச்சனை தீவிரமாக தலைத்தூக்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இந்த காற்று மாசு பிரச்சனை பல மாதங்கள் நீடித்து மக்களை வெளியே வர முடியாத சூழலுக்கு தள்ளிவிடுகிறது. தொடர்ச்சியாக காடுகள் அழிப்பு, சுற்றுசூழல் சீர்கேடே இதற்கு காரணம் என கூறப்படுகிற நிலையில், சமீப ஆண்டுகளில் இந்தியாவில் வனப்பரப்பை அதிகரிக்க மேற்கொண்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். இந்திய வனப்பரப்பு நிலை அறிக்கை (ISFR) 2021இன் படி நாட்டின் மொத்த வனம் மற்றும் மரங்களின் பரப்பு 2,261 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது. டேராடூனில் உள்ள இந்திய காடுகள் கணக்கெடுப்பு அமைப்பு 1987ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் கணக்கெடுப்பை நடத்தி அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

2021ஆம் ஆண்டு ஆய்வின்படி நாட்டில் மொத்த வனப்பரப்பு 7,13,789 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 21.72% ஆகும். 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிடுகையில் காடுகளின் பரப்பளவு 1,540 சதுர கிலோ மீட்டரும், மரங்களின் பரப்பளவு 721 சதுர கிலோ மீட்டரும் அதிகரித்துள்ளது. தேசிய அளவில் 2 ஆண்டுகளில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு மொத்தம் 2,261 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தேசிய மூங்கில் இயக்கம், வேளாண் காடுகளுக்கான துணை இயக்கம் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் காடுகள் மரங்களின் பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையும் படிங்க: அலுமினியத்தில் வந்தே பாரத் ரயில்கள்.. புதிய திட்டத்திற்கு மாறும் ரயில்வே... காரணம் இதுதான்..!

தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 1,30,060 சதுர கிலோ மீட்டராகவும், இதில் காடுகளின் பரப்பளவு 26,419 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளது. மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் இது 20.31% ஆகும். 2019 ஆண்டை ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டில் மாநிலத்தின் வனப்பரப்பு 0.21% அதிகரித்துள்ளது.

First published:

Tags: Environment, Forest