வேளாண் சட்டங்கள் தொடர்பான சர்ச்சை... ட்விட்டர் நிறுவன இந்திய அதிகாரிகள் கைதாக வாய்ப்பு

வேளாண் சட்டங்கள் தொடர்பான சர்ச்சை... ட்விட்டர் நிறுவன இந்திய அதிகாரிகள் கைதாக வாய்ப்பு

ட்விட்டர்

மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் பதிவு வெளியிட்ட 1178 கணக்குகளை முடக்க மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திடம் வலியுறுத்தியது.

 • Share this:
  வேளாண் சட்டங்கள் தொடர்பாக சர்ச்சையான டுவிட்டர் கணக்குகளை முடக்கும் விவகாரத்தில் விதிகளை பின்பற்றாத ட்விட்டர் நிறுவன இந்திய அதிகாரிகள் கைதாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் போராடும் நிலையில் மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் பதிவு வெளியிட்ட 1178 கணக்குகளை முடக்க மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திடம் வலியுறுத்தியது.

  அதில், இந்திய சட்டங்களின்படி 500 கணக்குகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்பதாகவும், கருத்து சுதந்திரம் கருதி மற்ற கணக்குகளை முடக்க முடியாது என்றும் ட்விட்டர் நேற்று விளக்கமளித்தது.

  முடக்கப்படாத கணக்குகளில் அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்களின் கணக்குகளும் உள்ளன. இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் நிறுவன அதிகாரிகளுடன் மத்திய தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சக செயலாளர் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

  அப்போது கிரெட்டா தன்பர்கின் டூல்கிட் என்ற பதிவை சுட்டிக்காட்டி, ட்விட்டர் நிறுவன தலைமையின் செயல்பாடுகளுக்கு தனது கண்டனத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பதிவு செய்தது.

  கூட்டத்துக்கு பின்னர் அறிக்கை வெளியிட்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டமும், நீதித்துறையும் பிரதானமானது என்றும் இந்திய விதிகளை ட்விட்டர் பின்பற்றவிலை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

  தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 ஏ பிரிவின்படி அளிக்கப்பட்ட நோட்டீசின் மீது ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அந்நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: