ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொரோனா தொற்றுக்குப் பிறகான புதிய ஆண்டு: இந்தியர்களின் 2021ம் ஆண்டின் சிறந்த ரெசல்யூசன்கள் - NEWS18 பிரத்யேக சர்வே

கொரோனா தொற்றுக்குப் பிறகான புதிய ஆண்டு: இந்தியர்களின் 2021ம் ஆண்டின் சிறந்த ரெசல்யூசன்கள் - NEWS18 பிரத்யேக சர்வே

உடற் பயிற்சி

உடற் பயிற்சி

45 சதவீத இந்தியர்கள் தினசரி உடற்பயிற்சியை செய்ய திட்டமிட்டுள்ளதாக NEWS18 உடன் இணைந்து YouGov  நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

புதிய ஆண்டு பிறந்தாலே ரெசல்யூசன்கள்களுக்கு பஞ்சமிருக்காது. 2020ம் ஆண்டு பலரது திட்டங்களை அழித்து துன்பத்தில் ஆழ்த்தியிருந்தாலும் இந்தியர்கள் இன்னும் தங்கள் ரெசல்யூசன்கள்களில் ஸ்ட்ராங்காக இருக்கிறார்கள். இருப்பினும், இந்த ரெசல்யூசன்கள்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்டின் தாக்கங்களிலிருந்து உருவாகின்றன என்பதால் ஒரு சிறிய திருப்பம் உள்ளது. 2020ம் ஆண்டு மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்தது, மக்களின் குறைந்தபட்ச வெளிப்புற நடவடிக்கைகள் எதுவும் இல்லாததால், மக்களின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 

அநேகமாக, இது இந்தாண்டு இந்தியர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளும்படி அழுத்தம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக NEWS18 உடன் இணைந்து YouGov  நடத்திய ஒரு ஆய்வில், இந்தாண்டு முதல் 45 சதவீத இந்தியர்கள் தினசரி உடற்பயிற்சியை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்கள். இது 2021ம் ஆண்டிற்கான அவர்களின் முதல் மூன்று  ரெசல்யூசன்கள்களில் ஒன்றாகும். மொத்தம் 100 சதவிகிதத்தில் - ஆண்கள் 46 சதவீதமும், பெண்கள் 45 சதவீதமும் இதை கூறியுள்ளனர். 

பேபி பூமர்களிடையே 55 சதவீதம் அதிக ஆர்வம் உள்ளதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. நாட்டின் மேற்கு பகுதியில் வாழும் இந்தியர்கள் அந்த இலக்கை வேகமாக அடைய விரும்புகிறார்கள் என்றும் கணக்கெடுப்பு காட்டுகிறது. 

நம்முடைய தனிப்பட்ட உடல்நலம் மற்றும் சுகாதாரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை கோவிட் பயம் எவ்வாறு மாற்றியுள்ளது என்பதைப் பற்றி சிந்தித்து, பதிலளித்தவர்களில் 32 சதவீதம் பேர் இந்த ஆண்டிலிருந்து தங்களை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்ள விரும்புகிறார்கள். 

தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரித்தல் மற்றும் கோவிட் -19ல் சிக்காமலிருப்பதற்கான அவசியத்தை புரிந்துகொள்வது ஆண்களை விட (30 சதவீதம்) பெண்கள் (34 சதவீதம்) அதிக கவனத்துடன் இருப்பதாக தெரிகிறது. ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டிய அவசியத்தைத் தொடர்ந்து, 26 சதவீத இந்தியர்கள் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் செக்கியூரிட்டிகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர், 

Gen X என்ற முதலீட்டுத் திட்டத்தில் 30 சதவிகித மக்கள் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது. மற்றொரு குறிப்பில், வெகுஜன தடுப்பூசி உருவாகும் வரை நாங்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த தொற்றுநோய் எங்கள் குடும்பங்களுடனான எங்கள் மகிழ்ச்சியை கடுமையாக மாற்றிவிட்டது. 

இந்தியர்களின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று, தங்களின் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதான், ஆனால் இந்த கோவிட் தொற்றுநோய் மில்லியன் கணக்கான உயிர்களைப் பறித்து பலருக்கும் பயத்தை அளித்துள்ளது. 34 சதவீத இந்தியர்கள் வரும் ஆண்டில் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை முன்னுரிமைப்படுத்த விரும்புகிறார்கள். 37 சதவிகிதத்தில்,18 வயது முதல் 29 வயது வரையிலான மக்களிடையே அதற்கான விருப்பம் மிக அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

2021ல் தொற்றுநோய், மாஸ்க்குகள் இல்லாத வாழ்க்கை : 

கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் உள்ள மக்களை கடுமையாக தாக்கியதால், தினசரி ஸ்ப்ளர்கிங் (Splurging) பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்லமுடியாத நிலையில், மக்கள் பணத்தை நிறைய சேமிக்க முடிந்தது.மேலும் பல இந்தியர்கள் வரும் ஆண்டிலும் இதைத் தொடர விரும்புகிறார்கள். சிலருக்கு, எதிர்பார்த்த நிலையில் அவர்களின் பொருளாதாரம் புத்துயிர் பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது. 

38 சதவிகித இந்தியர்கள் இதை 2021ம் ஆண்டின் சிறந்த ரெசல்யூசன்களில் ஒன்றாக மாற்ற ஆர்வமாக உள்ளனர். மேலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான விகிதம் 38 சதவீதமாகவே உள்ளது. இதில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் 32 சதவிகிதமாக உள்ளது. 18-29 வயதுக்குட்பட்டவர்களில் 43 சதவிகிதத்தினர் பணத்தை சேமிக்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

News18-YouGov சர்வே 2020 டிசம்பர் 29 முதல் 2021 ஜனவரி 3 வரை 1015 நகர்ப்புற இந்தியர்களிடையே இந்த கணக்கெடுப்பை நடத்தியது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: News18, Newyear resolution