முகப்பு /செய்தி /இந்தியா / பொருளதாரத்தின் சிறந்த ஆட்சி முறைக்கான எடுத்துகாட்டு உத்திரபிரதேசம் - உலக முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி புகழாரம்

பொருளதாரத்தின் சிறந்த ஆட்சி முறைக்கான எடுத்துகாட்டு உத்திரபிரதேசம் - உலக முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி புகழாரம்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 நாட்கள் நடைபெறுகின்ற உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 நாட்கள் நடைபெறுகின்ற உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வரும் நான்கு ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 10 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களை இதில் காண்போம்.

பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

நல்ல ஆட்சிக்கும், அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் இன்றைய உத்தரப்பிரதேசம் பெயர் போனதாகவுள்ளது.
இந்தியாவின் மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல் வளர்ச்சி மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
இந்தியா மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் கட்டாயத்தின் அடிப்படையில் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் செய்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பால் உற்பத்தி, மீன்வளம், விவசாயம், உணவு தயாரிப்பு தொழில் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற பிரிவுகள் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் விவசாயிகளின் பணச்செலவுகளைக் குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது இந்தியாவின் ஒன்பது வகையான தினைகளை ‘ஸ்ரீ ஆன்’ என்று அழைக்கிறோம். இந்தியாவின் ‘ஸ்ரீ ஆன்’ உலகளாவிய ஊட்டச்சத்து பாதுகாப்பை நிவர்த்தி செய்ய வேண்டும்
உத்தரப்பிரதேசம் பொருளாதாரத்தின் பின் தங்கிய நிலையில் இருந்ததால் ‘பிமாரு’ என்ற அழைக்கப்பட்டது. தற்போது சிறந்த ஆட்சி முறைக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
First published:

Tags: PM Modi, Uttar pradesh