Home /News /national /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 31, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 31, 2022)

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

Tamil News Today : குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.

  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது. நாளை பட்ஜெட் தாக்கல்.

  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதன மானிய நிதியாக 1,157 கோடியை ஒதுக்கீடு செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

  தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஒரு நாள் பாதிப்பு மளமளவென குறைந்து வருகிறது. ஒரே நாளில் 22,238 பேர் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர்.

  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேலும் 4 புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

  நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக இடையே பேச்சுவார்த்தை முழுமையாக நிறைவடையாத நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாடே போற்றிடும் வகையில் வெல்வோம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  சென்னை மாநகராட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட வார்டுகளை மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒருநாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் வேட்மனுத்தாக்கல் தொடங்குகிறது.

  தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி வந்த மருத்துவர்களை நீக்கி அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

  தமிழ்நாட்டில் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதால், சுற்றுலாதலமான கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

  தீப்பெட்டி தொழிலுக்கு மத்திய அரசு 25 சதவீதம் உற்பத்தி மானியம் வழங்க வேண்டும் என்றும், ஏற்றுமதிக்கு மீண்டும் 7 சதவீத ஊக்கத்தொகை வழங்குவது அவசியம் எனவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

  கீழடி அகழாய்வில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில், சென்னையில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால், சென்னையில் மீன் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

  சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சனிக்கிழமை 4,508 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், ஞாயிற்றுகிழமை 3,998 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  சென்னை எண்ணூர் கடற்கரையில் குளித்த சிறுவன், சிறுமி உயிரிழந்தனர்.

  சென்னை பூந்தமல்லி அருகே லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

  நெல்லையில் திமுக நிர்வாகியை, அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

  சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

  சேலத்தில் காதலனுடன் சேர்ந்து, கணவனை மனைவியே தலையணையால் அழுத்திக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

  திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பச்சிளம் குழந்தையை கல்லைக் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

  திருப்பத்தூரில் உள்ள ஓர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் தெரிவித்த முதியவரை, ஊராட்சி மன்றத் தலைவர் சமாதானம் செய்து தடுப்பூசி போட வைத்த வீடியோ, இணையத்தில் வைரலாகியுள்ளது.

  வேலூரில் நில அளவையர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டான நிலையில், ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  மானாமதுரை- ராமநாதபுரம் இடையேயான மின்சார ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

  ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் கின்னஸ் சாதனை முயற்சியாக, கண்களை கட்டிக்கொண்டு 2 மணி நேரம் சிறுவர், சிறுமியர் சிலம்பம் சுற்றினர்.

  மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தன்னை பாராட்டி பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக திருப்பூர் இளநீர் வியாபாரி தாயம்மாள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

  கோவை ராமநாதபுரம் அரசு பள்ளி மைதானத்தில் சூயஸ் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பென்னாகரம் அருகே பல்வேறு எருது விடும் போட்டிகளில் பங்கேற்ற கோயில் காளை உயிரிழந்ததால், கிராம மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.

  உதகையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பறக்கும்படை பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  தஞ்சை பள்ளி மாணவிக்கு முழுமையாக நீதி கிடைக்கும்வரை மாணவியின் குடும்பத்தினருடன் கடைசிவரை நின்று போராடுவோம் என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  இந்தியா:

  கடமைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டால், நாட்டையே வெறுமையாக்கும் லஞ்சம், ஊழல் இருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது "மனதின் குரல்" உரையில் கூறியுள்ளார்.

  ஜம்மு மற்றும் காஷ்மீரில் இரு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

  உலக அளவில், தொழுநோயால் புதிதாக பாதிக்கப்படுவோரில், 50 விழுக்காடுக்கும் அதிகமானோர், இந்தியாவில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

  பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியது தொடர்பாக கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது

  கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

  கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேரிடம் இருந்து 20 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் சாலையோர குடிசை வீட்டுக்குள் கார் புகுந்த விபத்தில், 4 பெண்கள் உயிரிழந்தனர்.

  ஆந்திரப்பிரதேச மாநிலம், கோதாவரியில் போலீசாரைத் தாக்கிய கள்ளச்சாராயக் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

  உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பரப்புரை மேற்கொண்டார்.

  கோவா மாநிலத்தில் வளர்ச்சியை கொண்டு வந்தது பாஜக தான் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வர்ண பூச்சுகளுக்கு பயன்படுத்தக் கூடிய எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

  பெங்களூருவில் மாற்றுத்திறனாளி பெண்ணை சரமாரியாகத் தாக்கிய போக்குவரத்து காவல் துறை எஸ்.ஐ., மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

  உலகச் செய்திகள்:

  கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தியதால், பிரதமர் ஜஸ்டின் டுரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

  பாம்போஜெனிசிஸ்(BOMBOGENESIS) எனப்படும் வரலாறு காணாத "நார் ஈஸ்டர்" வெடிகுண்டு பனிப்புயலால், அமெரிக்காவின் நியூயார்க், புளோரிடா உள்ளிட்ட பத்து மாகாணங்களில் திரும்பும் திசையெல்லாம் பனி படர்ந்து காணப்படுகிறது.

  சீனாவில் வரும் 1-ம் தேதி புத்தாண்டு, புலி ஆண்டாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ரஷ்யாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலிகளை காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக, மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. Zhang- jiakou மலைப்பிரதேசத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கான சாய்வான தளம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

  விளையாட்டு:

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி சுற்றில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவை போராடி வீழ்த்தினார்.

  சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலத்தில், தற்போதைய ஐசிசி விதிகள் இருந்திருந்தால், அவர் ஒரு லட்சம் ரன்களைக் குவித்திருப்பார் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

  ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நடப்புச் சாம்பியனான வங்கதேச அணியை வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Parliament, Today news, Top News

  அடுத்த செய்தி