மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 9.2 விழுக்காடு வளர்ச்சி காணலாம் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடியை கடந்துள்ளது . இது கடந்த வருட ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டுக்குள் 150 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனாவின் ஒரு நாள் பாதிப்பு. 20 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது.புதிதாக 19,280 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
புதுச்சேரியில் வருகின்ற 4-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் முனீஷ்வர்நாத் பண்டாரியை, தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்ல, இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வால் பாதிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது போல, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இரண்டரை சதவீதம், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் திருத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடபங்கீடு தொடர்பாக, திமுக - காங்கிரஸ் ,இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளராக மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா நியமிக்கப்பட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஆயிரத்து 650 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாஜக அறிவித்த நிலையில், தனது கட்சியின் சார்பில் களம்காணும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது.
பண மோசடி வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லாததால், விசாரணைக்கு ஆஜராகாமல் திரும்பிச் சென்றார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவையில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலாளர்கள் கொடி தயாரிப்பு பணிகளில் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் திமுக வட்டச்செயலாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் முன்பதிவு மூலம், நெல் கொள்முதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அருகே அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, அதிகாரிகளிடமும், மாணவி தற்கொலை செய்து கொண்ட பகுதி, மாணவியின் சொந்த ஊர் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கிராமத்திற்குள் நுழைய முயன்ற காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
கோவையில் இந்தியன் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தனியார் நிதி நிறுவன உரிமையாளர்களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட கணவருக்கு ஜாமின் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி 6 குழந்தைகளுடன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மீனவர்கள் தடையை மீறி நடத்திய போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து 4 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே சாத்தங்குடி கிராமத்து குளத்தில் 10 நாட்களாக முதலை நடமாடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள தொழுநோயாளிகள் ஆராய்ச்சி மையத்தில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Must Read : பசுமாட்டுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்கள்
பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தராகண்ட்,கோவா மற்றும் மணிப்பூர் மாநில தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆலோசனை மேற்கொண்டார்.
உத்தரபிரதேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கடுமையான முயற்சி செய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது டிவிட்டர் கணக்கில் இருந்து அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை முடக்கினார்.
கேரளாவை சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரர் வா வா சுரேஷை, நாகப்பாம்பு கடித்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி 90 சதவீத ஊனத்துடன் பிறந்த சிறுவன் தனது விடாமுயற்சியால் கேரளாவில் உள்ள பெரியாறு ஆற்றை ஒரு மணி நேரத்தில் நீந்தி கடந்து, சாதிப்பதற்கு உடல் ஊனம் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.
Read More : செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் - ஆய்வாளர்களின் நம்பிக்கையை மாற்றிய புதிய ஆய்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37.77 கோடியாக அதிகரித்துள்ளது.
பூஸ்டர் என்று அழைக்கப்படும் ராக்கெட்டின் மேல்பகுதி மார்ச் 4-ஆம் தேதி நிலவில் மோத இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
ஈரான் நாட்டில் உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளரை கொன்ற 2 சிங்கங்கள் தப்பிச் சென்றுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.