ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்த அதிர்ச்சி சம்பவம் - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்த அதிர்ச்சி சம்பவம் - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் மோடி இரங்கல்

குஜராத் பாலம் விபத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட நாட்டின் முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் நீரில் மூழ்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாநில அரசை அறிவுறுத்தியுள்ளார்.

  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு தரப்பில் 4 லட்ச ரூபாயும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்ச ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த விபத்துக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காயமடைந்தவர்கள் விரைவில் மீள விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், சிக்கியுள்ள நபர்களை விரைந்து மீட்க அரசு ஆணவ செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

  அம்மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கவும், பரப்புரையில் ஈடுபடவும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். இன்று அகமதாபாத்தில் பெரும் சாலை பேரணி நடத்த பிரதமர் திட்டமிட்டிருந்தார். விபத்தை தொடர்ந்து இந்த பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: 143 வருட பழமையான பாலம்... சரிசெய்த 5 நாளில் கோர விபத்து - நடந்தது என்ன?

  புனரமைப்பு பணிக்கு பின்னர் 5 நாள்களுக்கு முன்னர் தான் பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனவே, விபத்து தொடர்பாக பாலத்தை நிர்வகிக்கும் குழு மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த விபத்து தொடர்பாக முதலமைச்சர் பூபேந்திர பாடேல் அவசர ஆலோசனைக்கு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Accident, CM MK Stalin, Gujarat, PM Modi