ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் காணப்படும் மங்கிபாக்ஸ் வைரஸ் நோய் தற்போது பல்வேறு உலக நாடுகளில் தீவிரமாக பரவிவருகிறது. ஆப்ரிக்கா கண்டத்திற்கு வெளியே 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு மங்கிபாக்ஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவும் நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். அத்துடன் நோய்க்கான அறிகுறி கொண்ட நபர்களை சிகிச்சை மையங்களில் அனுமதித்து தனிமைபடுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர்களின் பரிசோதனை மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இனைந்து ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் தடுப்பு மையம் ஆகியவை மங்கிபாக்ஸ் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான வழிமுறைகளை வகுத்து வருகிறது.
இந்நிலையில் மங்கிபாக்ஸ் வைரஸ் குறித்து மத்திய அரசின் கோவிட் தடுப்பு குழுவின் தலைவரான டாக்டர் என்கே அரோரா கூறுகையில், கோவிட்-19 வைரஸ் போன்று மங்கிபாக்ஸ் வைரஸ் தீவிரம் கொண்டது அல்ல. அதேவேளை இதை நாம் அலட்சியமாக கருத கூடாது. இதுவரை மங்கிபாக்ஸ் பரவல் இந்தியாவில் கண்டறியப்படவில்லை. கோவிட்-19 போன்றே மங்கிபாக்ஸ் பரவல் குறித்து கண்காணிக்க மத்திய அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது. எனவே, பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வரும் நபர்களை அரசு கவனம் கொண்டு கண்காணிக்கும் என்றார்.
இதையும் படிங்க: மாரடைப்பு வருவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
அதேபோல், ஐசிஎம்ஆர் அமைப்பின் வைராலஜி பிரிவு தலைவர் நிவேதிதா குப்தா கூறுகையில், இந்த மங்கிபாக்ஸ் வைரஸ் கோவிட் போன்று காட்டுத்தீயாய் பரவாது. பாதிக்கப்பட்ட நபருடன் நீண்ட நேரம் முகத்துடன் முகம் தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு ஏற்படும். எனவே, கோவிட் போன்று மங்கிபாக்ஸ் பரவும் என அச்சப்பட தேவையில்லை என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Monkey B Virus, Virus