Home /News /national /

Independence Day 2020 | நாளை 74-வது சுதந்திர தின விழா: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

Independence Day 2020 | நாளை 74-வது சுதந்திர தின விழா: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

 நாளை 74வது சுதந்திர தின விழா

நாளை 74வது சுதந்திர தின விழா

Independence Day 2020 | சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் தலைமை செயலகம் , விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் மின்னொளியில் ஜொலித்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தியாவின் 74-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் குழந்தைகள் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    சென்னை மாநகரில் சுதந்திர தின விழாவிற்காக 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு தலைமை செயலக கட்டடம் முழுவதும் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை என மூவர்ண கொடி நிறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    தலைமை செயலகம் எதிரே காமராஜர் சாலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்கும் நிகழ்ச்சிக்காக பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இதேபோல் நேப்பியர் பாலம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    சுதந்திர தின விழாவை வரவேற்கும் விதமாக சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விமான நிலையமே பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. சிறப்பு அலங்காரத்துக்கு மத்தியில் விமான நிலையத்தில் உள்ள தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறந்தது. அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலைய வளாகங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டதூ.,

    ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதுடன், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,

    இதனிடையே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக மதுரையில் திருமலை நாயக்கர் மகாலில் முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் பேண்டு வாத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆட்சியர் வினய், முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    மேலும் படிக்க...கொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தவறியது டிரம்ப் அரசு - கமலா ஹாரிஸ் விமர்சனம்..

    டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் முப்படை வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். சுதந்திர தினத்தன்று விழா மேடைக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வருகை தருவது போன்றும் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைப்பது போன்றும் ஒத்திகை பார்க்கப்பட்டது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Independence day

    அடுத்த செய்தி