குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்!

குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்!
நாடாளுமன்றம்
  • News18
  • Last Updated: January 31, 2020, 7:36 PM IST
  • Share this:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இதையொட்டி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

2020 - 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல் நாளான நாளை இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி 2020 -2021ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாளை தொடங்கும் கூட்டத்தொடரின் முதல் பகுதி, பிப்ரவரி 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கூட்டத்தொடரின் 2வது பகுதி மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பட்ஜெட்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, தனிநபர் வருமான வரியை குறைப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருக்கலைப்புக்கான அவகாசத்தை 24 வாரங்களாக நீட்டிப்பதற்கான சட்டத்திருத்தத்தை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் குடியுரிமை சட்டத்திருத்தம், காஷ்மீர் நிலைமை, வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் இருஅவைகளையும் சுமூகமாக நடத்தும் வகையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அதிமுக நாடாளுமன்றக் குழு தலைவர் நவநீத கிருஷ்ணன், திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்க அரசு தயாராக இருப்பதாகவும், அனைத்து பிரச்னைகளின் மீதும் விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேபோல் மக்களவை அனைத்துக்கட்சி கூட்டம் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்றது. மாநிலங்களவை அனைத்துக்கட்சி கூட்டம் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமையில் நாளை நடைபெற உள்ளது.Also see:


 
First published: January 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading