ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் குழந்தைகளை குறிவைத்து வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்... அறிகுறிகள், சிகிச்சைகள் என்ன?

கேரளாவில் குழந்தைகளை குறிவைத்து வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்... அறிகுறிகள், சிகிச்சைகள் என்ன?

கேரளாவில் குழந்தைகளை குறிவைத்து வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்...

கேரளாவில் குழந்தைகளை குறிவைத்து வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்...

குழந்தைகளை குறி வைத்து தாக்கும் தக்காளி காய்ச்சல் கேரளாவில் வேகமாக பரவி வருகிறது. எலி மற்றும் பன்றிக் காய்ச்சல் வரிசையில் இதற்கு ஏன் தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மழைக் காலங்களில் அசுத்தமான நீரில் இருக்கும் கிருமிகள் மூலம் எலி காய்ச்சல் பரவுகிறது. எலி காய்ச்சல் பரவுவதற்கு காரணமான leptospira என்ற பாக்டீரியா பாதித்த எலியின் முடி, எச்சில், கழிவுடன் மனிதர்களுக்கு தொடர்பிருந்தால் தொடர் பயன்படுத்தும் போது மனிதர்களிலும் இந்த காய்ச்சல் பரவத் தொடங்குகிறது. எலிகளில் இருந்து நேரடியாக மனிதர்களுக்கு காய்ச்சல் பரவுவதால் இதற்கு எலிக் காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது.

  பன்றி காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக் கூடியது. பன்றிகளுடன் நேரடி தொடர்பில் உள்ள மனிதர்களை இந்நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும்.பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்-1.என்-1 என்ற வைரஸ் கிருமி மூலம் பன்றிக்கு வரக் கூடிய மூச்சுக்குழல் நோய் படிப்படியாக மனிதர்களையும் தொற்றிக் கொள்கிறது.

  ஜப்பானிய மூளைக் காய்ச்சலை, கியூலக்ஸ் இன பெண் கொசுக்கள்தான் மனிதர்களுக்கு பரப்புகிறது. 1870-ம் ஆண்டிலேயே ஜப்பான் நாட்டில் முதல் முறையாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டதால் இதனை  ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்று அழைக்கின்றனர்.

  அந்த வரிசையில் தற்போது தக்காளி காய்ச்சல் என்ற காய்ச்சல் ஒன்று அச்சுறுத்த தொடங்கியுள்ளது. பொதுவாக இந்தியாவில் அதிகம் காணப்படும் இந்த காய்ச்சல் சிக்குன் குனியாவின் பின்விளைவு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சிக்குன் குனியா என்பது கொசுக்கடியின் மூலம் பரவும் ஒரு வைரஸாகும், இதனால், அதிக காய்ச்சல், தலைவலி, கடுமையான மூட்டுவலி, தடிப்புகள் மற்றும் குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

  Also Read : உலகின் மிகப் பெரிய சன் டூங் குகை... சுற்றிப்பார்க்க யார் யாரெல்லாம் செல்லலாம்?

  சிக்கன் குனியாவின் அடுத்த வெர்சனாக பார்க்கப்படும் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொறி, தோல் எரிச்சல் மற்றும் நாக்கில் நீரிழப்பு அறிகுறிகள் தோன்றும். முக்கியமாக கை, கால்களில் சிவப்பு நிறத்தில் தழும்பு வந்து பார்ப்பதற்கு தக்காளி போல் இதற்கு தக்காளி காய்ச்சல் என்று பெயர் சூட்டியுள்ளனர் மற்றபடி தக்காளிக்கும், தக்காளி காய்ச்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  மனித உடலில் தக்காளி வடிவில் இருக்கும் காயங்களில் இருந்து நீர் வடியும். மேலும், வாயின் உள்பகுதியில் கடும் எரிச்சல் ஏற்படும் என்பதால் குழந்தைகள் சாப்பிடுவதில் சிரமங்களை ஏற்படுத்தும். இந்த காய்ச்சல் எளிதில் மற்றொருவருக்கு பரவக் கூடியதாகும். எனவே, தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம் இருந்து பெற்றோர் விலகி இருக்க வேண்டும், குழந்தைகள் பயன்படுத்தும் பாத்திரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  கொசுக்கடியிருந்து தப்பிப்பதன் மூலம் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, யானைகால் நோய், மூளைக்காய்ச்சல் போன்வற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். பாதுகாக்கப்பட்ட அல்லது காய்ச்சிய நீரை குடிப்பது, உணவுகளில் ஈ மொய்க்காமல் பாதுகாத்துக்கொள்வதன் மூலம் வயிற்றுப்போக்கு, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றால் ஏற்படும் காய்ச்சல்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவரும் காய்ச்சலை சாதாரணமாக எண்ணாமல், அவற்றில் உள்ள வகைகளை அறிந்து மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Kerala, Tomato Fever