பா.ஜ.க.வில் ஐக்கியமான சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளர்!

news18
Updated: March 14, 2019, 6:28 PM IST
பா.ஜ.க.வில் ஐக்கியமான சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளர்!
பாஜகவில் இணைந்த டாம் வடக்கண்
news18
Updated: March 14, 2019, 6:28 PM IST
சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளர் டாம் வடக்கன், சில நாட்களுக்கு முன்னர் வரை பாஜகவை விமர்சித்து வந்த நிலையில் இன்று திடீரென அக்கட்சியில் இணைந்து காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஒரு கட்சியில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை இழுக்கும் பணியிலும் மற்றொரு கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், திரினாமுல், பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் உள்ள அதிருப்தி தலைவர்களை கட்சிக்குள் இழுக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்தவரும் சோனியா காந்தியின் நெருங்கிய அரசியல் உதவியாளருமான டாம் வடக்கன் இன்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவை விமர்சித்து டாம் வடக்கன் பதிவிட்ட ட்வீட்


புல்வாமா தாக்குதலை காங்கிரஸ் அரசியலாக்கிவிட்டதாக அவர் கூறி பாஜகவில் இணைந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் வரை பாஜகவை கடுமையாக விமர்சித்துவிட்டு இன்று திடீரென அக்கட்சியிலேயே அவர் இணைந்துள்ளது காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர்.

Also See...
Loading...
First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...