Home /News /national /

சுங்கச்சாவடியில் பெண் ஊழியருக்கு கன்னத்தில் பளார் விட்ட நபர்.. கட்டணம் செலுத்த சொன்னதால் ஆத்திரத்தில் வெறிச்செயல்.. வைரலாகும் வீடியோ..

சுங்கச்சாவடியில் பெண் ஊழியருக்கு கன்னத்தில் பளார் விட்ட நபர்.. கட்டணம் செலுத்த சொன்னதால் ஆத்திரத்தில் வெறிச்செயல்.. வைரலாகும் வீடியோ..

சுங்கச்சாவடியில் பெண் ஊழியர் மீது தாக்குதல்

சுங்கச்சாவடியில் பெண் ஊழியர் மீது தாக்குதல்

Tollgate Viral Video : சுங்கச்சாவடி பெண் ஊழியர் மீது தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த வீடியோ வைரலான நிலையில் அந்த நபர் தற்போது தலைமறைவாகி உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh | Tamil Nadu
    சுங்கச்சாவடியில் வேலை பார்த்த பெண் ஊழியரை ஒரு நபர் தாக்கும் அதிர்ச்சிக்குரிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் ராஜ்கர்-போபால் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்குள்ள டோல் பிளாசா ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் வழக்கமான வேலைகளை செய்து வந்த நிலையில், அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் குர்ஜார் என்ற நபர் தனது காரில் வந்துள்ளார்.

    அவரின் கார் டோல் பகுதியை அடைந்த நிலையில், அந்த நபரை சுங்க கட்டணம் கட்டச் சொல்லி பெண் ஊழியர் கேட்டுள்ளார். அதற்கு ராஜ்குமார், தான் உள்ளூர்காரன் என்பதால்  தனக்கு சுங்கக் கட்டணம் கட்டுவதில் இருந்து  விலக்கு பெற்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும், ராஜ்குமார் வாகனத்தில் பாஸ்ட் டேக் பொருத்தவில்லை.

    இதனால், கட்டணம் செலுத்த விலக்கு என்பதற்கு ஏதேனும் ஆவணம் உள்ளதா என்று அந்த நபரிடம் பெண் ஊழியர் கேட்டுள்ளார். இது தொடர்பான விவாதம் இருவருக்கும் வாக்குவாதமாக மாறிய நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜ்குமார், பெண் ஊழியரை திடீரென கண்ணத்தில் அறைந்து தாக்கினார். பதிலுக்கு அந்த பெண் ஊழியரும் தனது கால் செருப்பால் அந்த நபரை திருப்பி அடித்து தாக்கியுள்ளார்.


    இதனை தொடர்ந்து ராஜ்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி விரைந்து கைது செய்வோம் என உறுதி அளித்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: CCTV, Madhya pradesh, Video gets viral

    அடுத்த செய்தி