சுங்கசாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டண நடைமுறையில் உள்ள சிக்கல்களும், பிரச்னைகளும்...

சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் பலருக்கு தமிழ் தெரிவதில்லை எனக் லாரி ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சுங்கசாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டண நடைமுறையில் உள்ள சிக்கல்களும், பிரச்னைகளும்...
கோப்பு படம்
  • News18 Tamil
  • Last Updated: November 28, 2019, 10:10 AM IST
  • Share this:
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில், டிசம்பர் ஒன்று முதல் ஃபாஸ்டாக் கட்டணம் நடைமுறைக்கு வரும் நிலையில், அதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?, அதனால் ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய சுங்கச்சாவடிகளில், டிசம்பர் ஒன்று முதல் ஃபாஸ்டாக் கட்டண நடைமுறை அமலுக்கு வருகிறது. ஆனால் இதுவரை பெரும்பாலானோர் ஃபாஸ்டாக் கட்டண முறைக்கு மாறாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஃபாஸ்டாக் முறைக்கு மாறியவர்களும் தினந்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஒரு சுங்கச்சாவடியை கடக்கும் போது வேலைசெய்யும் ஃபாஸ்டாக் அட்டையானது, அடுத்த சுங்கச்சாவடியில் வேலை செய்வதில்லை என கூறுகின்றனர்

சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் பலருக்கு தமிழ் தெரிவதில்லை எனக் கூறும் லாரி ஓட்டுநர் கணேஷ், இதனால் ஃபாஸ்டாக் குறித்த விவரம் கேட்பதற்கு மிகவும் சிரமம் ஆக இருப்பதாக கூறுகிறார்


 

அதேபோல, ஃபாஸ்டாக் ஸ்டிக்கர்களை அனைத்து வங்கிகளிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தபோதிலும், சில வங்கிக் கிளைகளில் மட்டுமே கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தாலும், ஃபாஸ்டாக் ஸ்டிக்கர்கள் கிடைப்பதற்கு குறைந்தது 15 நாட்கள் ஆகும் என்பதால், என்ன செய்வது என்றே புரியவில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்