• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதுச்சேரியில் சுங்கச்சாவடிகள் திறப்பு - கொரோனா அச்சத்துடன் பணியாற்றும் ஊழியர்கள்!

புதுச்சேரியில் சுங்கச்சாவடிகள் திறப்பு - கொரோனா அச்சத்துடன் பணியாற்றும் ஊழியர்கள்!

கோப்புப்படம்

கோப்புப்படம்

சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களின் டயர்கள் மீது கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் மூடப்பட்டன. ஊரடங்கு உத்தரவில் தற்போது தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் அவை இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும் அச்சத்துடன் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் 25 நாட்களுக்குப் பிறகு பணிக்குத் திரும்பியிருக்கிறார்கள். இவர்களுக்கு கையுறை, முகக்கவசம், சானிடைசர் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் இவர்கள் கிருமிநாசினி கொண்டு கை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களின் டயர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also read: போக்குவரத்து இல்லாமல் எப்படி பணிக்கு வருவது? தபால் துறை ஊழியர்கள் கேள்வி

அதிக அளவிலான வாகனங்கள் சுங்கச்சாவடியில் காணப்படவில்லை. காலையில் கனரக வாகனங்கள் காய்கறி, மளிகை பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் தவிர குறைந்த அளவிலேயே வாகனங்கள் சுங்கச் சாவடியைக் கடந்து செல்கின்றன.

கொரோனா நோய் பரவுவதன் காரணமாக ஊழியர்கள் அச்சத்துடன்தான் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வாகனங்கள் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது நோய் பரவும் அபாயம் இருப்பதால், மீண்டும் சாவடிகளை மூட வேண்டும் என்றும் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பயத்துடன் பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: