ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாட்டு நிலைமை சரியில்ல, பசங்கள வெளிநாட்டில் செட்டில் ஆக சொல்லிட்டேன் - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

நாட்டு நிலைமை சரியில்ல, பசங்கள வெளிநாட்டில் செட்டில் ஆக சொல்லிட்டேன் - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

முன்னாள் அமைச்சர் அப்துல் பாரி சித்திக்கி

முன்னாள் அமைச்சர் அப்துல் பாரி சித்திக்கி

இந்தியாவில் சூழல் சரியில்லை என்பதால் எனது பிள்ளைகளை வெளிநாட்டில் குடியேற சொல்லிவிட்டேன் என பீகார் முன்னாள் அமைச்சர் அப்துல் பாரி சித்திக்கி பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bihar, India

பீகார் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரும் அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான அப்துல் பாரி சித்திக்  நிகழ்ச்சி ஒன்றில் கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவரான அப்துல் பாரி அம்மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினராக 7 முறை வெற்றிபெற்று தேர்வாகியுள்ளார்.

இவர் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ஒன்றில் பேசிய காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில், எனக்கு மகன் ஒருவர் உள்ளார். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். மகள் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்சில் படித்துள்ளார். நான் அவர்கள் இருவரையும் வெளிநாட்டிலேயே தங்கி வேலை பார்க்க கூறிவிட்டேன். முடிந்தால் அந்நாடுகளின் குடியுரிமை பெற்று அங்கேயே செட்டில் ஆகிவிடுங்கள் என்றுள்ளேன். காரணம் இங்கு நாட்டின் சூழல் அவ்வாறு மோசமாகியுள்ளது.

தனது பிள்ளைகளை நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு சென்றுவிடுங்கள் என்ற சொல்வது எவ்வளவு வலி மிகுந்த ஒன்று என அனைவருக்கும் புரியும். ஆனால் நாட்டின் நிலைமை அவ்வாறு உள்ளது என்றார். நாட்டில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாக குறிப்பிட்டு இவ்வாறு அவர் பேசினார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா பயம்! 3 ஆண்டுகள் வீட்டு அறையை விட்டு வெளிய வராத பெண்கள்..போலீஸ் உதவியுடன் மீட்பு

முன்னாள் அமைச்சர் அப்துல் பாரிக்கு பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இவர் நாட்டிற்கு எதிராக விஷத்தை கக்குவதாக பீகார் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நிக்கில் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதை வைத்து பாஜக தேவையில்லாமல் அரசியல் செய்வதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி பதில் அளித்துள்ளது. பாதுகாப்பு இல்லாத சூழலில் இருப்பதாக இஸ்லாமியர்கள் உணரும் நிலை உருவானது ஏன் என்பதை ஆட்சியில் இருக்கும் பாஜக சிந்திக்க வேண்டும் என ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி பதில் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: RJD, Viral News, Viral Video