72 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் கழிவறை இல்லை! மத்திய அமைச்சர் விளக்கம்

72 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் கழிவறை இல்லை! மத்திய அமைச்சர் விளக்கம்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 27, 2019, 9:04 PM IST
  • Share this:
நாட்டில் உள்ள 72 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் கழிவறை வசதியே இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள மருத்துவமனைகளிலுள்ள கழிவறை வசதிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதிலளித்தார். அப்போது, அரசு மருத்துவமனைகளில் கழிவறையின் நிலை மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை நிலையங்கள் போன்ற சிறிய அளவிலான அரசு மருத்துவமனை பெரும்பாலானவற்றில் கழிவறை வசதிகள் இல்லை என்றும்,  சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில் ஆண்- பெண் நோயாளிகளுக்கு என்று தனித்தனி கழிவறைகள் இல்லை என்றும் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தமிழ்நாடு, சத்திஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் மருத்துவமனைகளில் கழிவறை வசதி மிகவும் குறைவாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.


Also see:

 
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்