இலங்கை சென்ற மோடிக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கும்போது, மழை பெய்ததால், அவருக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா குடைபிடித்தார். அந்தப் ஃபோட்டோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக மாலத்தீவு சென்றிருந்தார். அங்கிருந்து இன்று மதியம் இலங்கைக்கு சென்றார். அவருக்கு, அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா வரவேற்பு அளித்தார். மோடிக்கு இலங்கை அதிபர் மாளிகையில் முப்படை மரியாதை வழங்கப்பட்டது.
அப்போது, அங்கே லேசாக மழை பெய்தது. அப்போது, மைத்திரிபால சிறிசேனா, மோடிக்கு குடைபித்தார். இருவரும் ஒரே குடையில் நின்று அணி வகுப்பு மரியாதையை கண்டு ரசித்தனர்.
அந்த ஃபோட்டோவை ட்விட்டரில் பதிவிட்ட இந்திய வெளியுறத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிஸ் குமார், ‘வெயிலோ, மழையோ நாங்கள் உங்களுடன் இணைந்திருப்போம்.(Together with you- come rain or shine) பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்பின் சில துளிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
Together with you- come rain or shine என்ற வரிகள், அமெரிக்கன் ஜாஸ் இசைக் கலைஞர் பில்லி ஹாலிடேவின் பாடிய பாடலின் வரிகள்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.