Home /News /national /

குறுக்குவழி அரசியல் தேசத்தையே நாசம் ஆக்கிவிடும் - பிரதமர் மோடி

குறுக்குவழி அரசியல் தேசத்தையே நாசம் ஆக்கிவிடும் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Modi: குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறுக்குவழி அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் 2018ம் ஆண்டு தியோகரில் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டினார். 401 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக ஜார்கண்ட் வந்த பிரதமர், தியோகர் நகரில் 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைமார்க்கமாக பயணம் செய்தார். அப்போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்களை கண்டதும், பிரதமர் காரின் கதவை திறந்து, நின்றபடியே கையசைத்துச் சென்றார்.

    இதையடுத்து, புதிதாக கட்டப்பட்ட தியோகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன், தியோகர்-கொல்கத்தா இடையேயான இன்டிகோ விமானத்தின் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அதை தொடர்ந்து தியோகர், எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு மற்றும் ஆபரேஷன் தியேட்டர் சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இது மட்டுமல்லாமல் 16,800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

    Also Read: ‘அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை’ - பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால் சர்ச்சை

     



    பின்னர் பேசிய பிரதமர் மோடி, ஜார்கண்ட் மட்டும் இன்றி இந்த திட்டங்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கும் பயனளிக்கும் என்றார். தியோகர் விமான நிலையம் தங்களின் நீண்ட கால கனவு எனவும், அது தற்போது நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறினார், குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குறுக்குவழி அரசியல் தேசத்தையே நாசம் ஆக்கிவிடும் என்றும் பிரதமர் கூறினார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களை பிரதமர் மோடி குறுக்கு வழி அரசியல் என விமர்சித்தார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: BJP, Narendra Modi, PM Modi, Politics

    அடுத்த செய்தி