• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • யார் போராட்டம் பண்ணா எனக்கென்ன...? என் ரேட் ஏறிக்கிட்டேதான் இருக்கும்: இப்படிக்கு பெட்ரோல்!

யார் போராட்டம் பண்ணா எனக்கென்ன...? என் ரேட் ஏறிக்கிட்டேதான் இருக்கும்: இப்படிக்கு பெட்ரோல்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

  • News18
  • Last Updated :
  • Share this:
    பெட்ரோல் விலை இன்றும் வழக்கம்போல உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூரில் ஒரு லிட்டர் ரூ.86.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது.   

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 30 காசுகள் உயர்ந்து ரூ.84.49-க்கு  விற்பனையாகிறது. இதேபோல் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து ரூ.77.49-க்கு விற்பனையாகிறது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 29 காசுகள் அதிகரித்து ரூ.85.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல டீசல் 24 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.79.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நாடு முழுவதும் பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து  எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் சங்கத்தினரும் போராட்டம் நடத்தினாலும், பெட்ரோல் - டீசல் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:SPDakshina Murthy
    First published: