முகப்பு /செய்தி /இந்தியா / இலங்கை பிரதமர் ராஜபக்ச இன்று இந்தியா வருகை...! ராணுவ ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை நடத்த திட்டம்

இலங்கை பிரதமர் ராஜபக்ச இன்று இந்தியா வருகை...! ராணுவ ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை நடத்த திட்டம்

மஹிந்த ராஜபக்ச

மஹிந்த ராஜபக்ச

  • Last Updated :

இன்று இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு வருகைத் தரவுள்ளார்.

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். இதையடுத்து , அந்நாட்டின் பிரதமராக அவரது மூத்த சகோதரும், இலங்கையின் முன்னாள் அத்பருமான மகிந்த ராஜபக்ச பதவியேற்றார்.

இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பின்னர் கோத்தப்பட ராஜ பக்ச கடந்த நவம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடி அவரைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் இலங்கைப் பிரதமர் ராஜபக்ச 4 நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவிற்கு இன்று வருகைத் தரவுள்ளார். அவரது அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் என 10 அடங்கிய உயர் நிலைக் குழுவும் அவருடன் இந்தியா வருவதாக இலங்கைப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும், பிரதமர் மோடியையும் ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளார்.

இந்தப் பேச்சு வார்த்தையின் போது இரு தரப்பு வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு , கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவ்ல் தெரிவிக்கின்றன.

top videos

    First published:

    Tags: Mahinda Rajapakse, PM Modi