NEET Exam : நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நீட் தேர்வு

நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    2021ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, தேர்வு மையங்களை அதிகரித்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பின்னர் தேர்வு நடத்தப்பட்டது.

    தேர்வு தாமதமாக நடத்தப்பட்டதால், கடந்த ஆண்டில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையும் தாமதமானது. இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஜூலை 13 முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.

    Must Read : வெள்ளை அறிக்கை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,63,976 கடன் சுமை உள்ளது

    இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,  அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கால அவகாசமும் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: