GST Council Meeting: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

  • Share this:
    கொரோனா இரண்டாவது அலை தொற்று பரவலால் சிகிச்சைக்கான அத்திவாசிய மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகளின் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த சூழலில் 6 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. கொரோனா சிகிச்சை தொடர்பான மருந்துகளுக்கு வரி குறைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

    தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளும், மருந்துகளுக்கான வரி விதிப்பை தவிர்க்க முடிவு எடுத்து வலியுறுத்த இருப்பதாக தெரிகிறது.

    Must Read : ஒருவருக்கு இரு வேறு தடுப்பூசி போடுவது ஆபத்தா? மத்திய அரசு விளக்கம்

     

    இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: