உலகளவில் பரவி வரும் புதிய வகை கொரோனாவான BA4 வகை வைரஸ் இந்தியாவில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஐதராபாத் திரும்பிய ஒருவருக்கு புதிய ஒமிக்ரான் தொற்று கண்டறிப்பட்டது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 47 ஆயிரம் கனஅடியை தாண்டியுள்ளது
பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியின் போது தங்க நகைகளை திருடிய பெண் ஊழியரை போலீசார் கைதுசெய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கோவிந்தபட்டி வழியாக தனியார் கல்குவாரிக்கு உயர்மின்அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வீட்டின் இரும்பு தடுப்புகளை ஏறி குதித்த மூன்று கரடிகள் , பூஜைக்காக வைத்திருந்த எண்ணெய்யை குடித்து விட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை வளசரவாக்கத்தில் சொத்துத்தகராறில் தந்தையை கொன்ற மகன், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் புதைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள ராணுவ வீரர்களின் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் சகல வசதிகளுடன் திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பேருந்து கட்டணம் கேட்ட நடத்துநரை கான்ஸ்டபிள் ஒருவர் எட்டி உதைத்த சம்பவம் அரங்கேறியது.
தெலங்கானாவில் மூன்று ஆண்டுக்ளுக்கு முன்னர் நான்கு பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனிடையே மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் சுரங்கப் பாதை கட்டுமானப் பணியின் போது நிகழ்ந்த விபத்தில் இதுவரை 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் லொசாவா நகரில் கலாச்சார மைய கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குரூப்-2 தேர்வு இன்று நடைபெறும் நிலையில், தேர்வர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை TNPSC அறிவித்துள்ளது.
இந்தோனேசிய ஓபன் பேட்மின்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதியில் அடியெடுத்து வைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் சென்னை அணியை, ராஜஸ்தான் அணி வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.
ஃபிபா உலகக் கோப்பை ஆண்கள் கால்பந்து போட்டிக்கு முதல் முறையாக பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.