Home /News /national /

Headlines Today : இ-பைக் புதிய தயாரிப்புகளை வெளியிட வேண்டாம்... ஐபிஎல் டெல்லி அணி வெற்றி - தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 29-2022)

Headlines Today : இ-பைக் புதிய தயாரிப்புகளை வெளியிட வேண்டாம்... ஐபிஎல் டெல்லி அணி வெற்றி - தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 29-2022)

எலக்ட்ரிக் வாகனம்

எலக்ட்ரிக் வாகனம்

Headlines Today : மின்சார ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பிடித்து எரியும் சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது நிலையில், புதிய தயாரிப்புகளை வெளியிட வேண்டாம் என்று மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  மின்சார இரு சக்கர வாகனங்களில் புதிய தயாரிப்புகளை வெளியிட வேண்டாம் என எலெக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போல், கோவை, மதுரை, திருப்பூர், ஒசூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பெருநகர வளர்ச்சி குழுமங்கள் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

  ஆளுநர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழக மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் 24 மணி நேரத்தில் புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தூத்துக்குடியில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில் திருத்தணியில் 102 புள்ளி 74 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில், 9 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஊருக்குள் வந்த பாகுபலி யானை, விளை பொருட்களை சேதப்படுத்தப்படுத்தும் என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் தஸிஸ் எனும் அபுதாபி கெமிகல்ஸ் டெரிவேடிவ்ஸ் நிறுவனம் இரண்டும் எதிலீன் டைகுளோரைடு மற்றும் பிவிசி தயாரிப்பு திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.

  பிரபல நடிகர் சலீம் கவுஸ் இதயக்கோளாறால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.

  இலங்கையில் வர்த்தக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம்; சிக்கலில் இருந்து நாட்டை மீட்க வழி காணாத அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

  Must Read : பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வியா? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

  உக்ரைனுக்கு ஆயுதங்களை கடனாக வழங்குவதற்கான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக, ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி