Home /News /national /

Headlines Today : ஒமைக்ரானில் இருந்து கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பில்லை... - தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 28-2022)

Headlines Today : ஒமைக்ரானில் இருந்து கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பில்லை... - தலைப்புச் செய்திகள் (ஏப்ரல் 28-2022)

Corona Mask

Corona Mask

Headlines Today : ஒமைக்ரான் வைரஸில் இருந்து கொரோனா 4ஆவது அலை பரவ வாய்ப்பில்லை என தேசிய தொற்று நோய் திட்ட ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் தெரிவித்துள்ளார்.

  தஞ்சாவூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின், நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

  தஞ்சாவூர் களிமேட்டில் உயிரிழந்த 11 பேர்களில், 8 பேரின் உடல்கள் எரியூட்டப்பட்டன. 3 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டன.

  ஒமைக்ரான் வைரஸில் இருந்து கொரோனா 4ஆவது அலை பரவ வாய்ப்பில்லை என தேசிய தொற்று நோய் திட்ட ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் தெரிவித்துள்ளார்.

  பிரதமர் நரேந்திர மோடி, இன்று அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

  பெட்ரோல் - டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியை குறைக்க தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் வலியுறுத்தியுள்ளார்.

  கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் நடைபெற்று வந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

  தமிழகத்தில் முதலமைச்சரை வேந்தராக கொண்டு புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

  சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமானது.

  பள்ளிக்கல்வித்துறையில் ஊழல்களை தடுக்க உயரதிகாரிகளின் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

  புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  நாகூர் தர்காவில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் சசிகலா கலந்துகொண்டார்.

  பப்ஜி மதனின் ஜாமின் மனுவை மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இந்தி எப்போதும் தேசிய மொழிதான் என்று ட்விட் செய்து சர்சையில் சிக்கி இருக்கிறார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்.

  தான் ஒரு உளறுவாயன் என்பதால் அரசியலுக்கு வரவில்லை என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

  நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  ஒன்று முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி என அறிவிக்க புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்வதற்கான வயதுவரம்பை 6ஆக நிர்ணயித்தது சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

  மாநில அமைச்சரவை முடிவுக்கு எதிராக செயல்பட ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் கண்டனம்.

  Must Read : ‘மாமா’ என்ற அபயக்குரல்.. 10 ஆண்டு பகை மறந்து ஓடோடி வந்து உயிரிழந்த உறவு - தஞ்சை களிமேட்டில் துயரம்!

  பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

  உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ஐ.நா பொதுசெயலாளர் அன்டானியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  நெருக்கடிகளுக்கு அடிபணிந்து பதவியிலிருந்து விலக போவதில்லை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மீண்டும் தெரிவித்துள்ளார்.

  இலங்கையில் அனைத்துக்கட்சிகளும் பங்கேற்கும் இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

  ஐபில் லீக் போட்டியில் ரசித் கான்- திவேதியா சிக்சர் மழையால் குஜராத் அணி இறுதி ஓவரில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி