இன்று சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் கோவில்களில் நடை சாத்தப்படுகிறது. சூரிய கிரகணம் முடிந்த பின்னர் கோவில் சுத்தப்படுத்தப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்படும்.
இந்தப் பகுதி நேர, கங்கண சூரிய கிரகணம் டெல்லியில் 94 சதவீதமும், கவுஹாத்தியில் 80 சதவீதமும், பாட்னாவில் 78 சதவீதமும் இருக்கும்.
சென்னையை பொறுத்தவரை 34 சதவீதம் கிரகணம் மட்டுமே தெரியும். அதிகப்பட்ச கிரகணமானது நண்பகல் 12 மணிக்கு நிகழும்.
வெறும் கண்களாலோ, தொலைநோக்கியாலோ சூரிய கிரகணத்தை கட்டாயம் பார்க்கக்கூடாது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த சூரிய கிரகணம் 2020 டிசம்பர் 14-இல் தோன்றும் என்றாலும், வானில் நெருப்பு வளையம் போல் தோன்றும் இந்த கங்கண சூரிய கிரகணத்தை 2031 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தான் இனி காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.