• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன ஆயுதம்!!

இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன ஆயுதம்!!

இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன ஆயுதம்!!

இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன ஆயுதம்!!

சீனாவுடனான இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லையை பாதுகாக்கும், நமது ராணுவ வீரர்களுக்கு புதிய பிரத்யேகமான ஆயுதங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    இந்தியா- சீனா எல்லையை பாதுகாக்க 1975ம் ஆண்டு நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 4 பேர் அருணாச்சல பிரதேசம் அருகே சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன்பிறகு எல்லையில் துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லை.

    1996ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி, இருநாட்டு எல்லைக்கோட்டுப்பகுதி அருகே 2 கிலோமீட்டர் தூரத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்த தடை உள்ளது. இதன் காரணமாக இந்தியா- சீனா இடையேயான எல்லையில் வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டாலும் அது மற்போராகவே இருந்து வந்தது.



    ஆனால் கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில், பாங்காங் சோ ஏரி அருகே இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். மோதலின் போது சீனப்படையினர் முன்கூட்டியே திட்டமிட்டு, கொண்டு வந்திருந்த முள்கம்பிகள் சுற்றிய கட்டைகளால் இந்திய வீரர்களை தாக்கினர். இதனையும் இந்திய வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டனர்.



    இந்த நிலையில் இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் வஜ்ரா என்ற பெயரில் புதிய ஆயுதம் தயாராகியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய வீரர்களுக்கு வஜ்ரா ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இந்த நவீன ஆயுதம் போலீசார் தடியடி நடத்தும் தடியைப்போலவே காட்சியளிக்கும், ஆனால் தடிக்கு இடையே ஆணிகள் போன்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. எதிரிநாட்டு வாகனங்களை தாக்க இந்த அமைப்பை பயன்படுத்த முடியும்.

    எதிர் நாட்டு வீரர்களை தற்காலிகமாக முடக்கும் வகையில் சிறிய அளவிலான மின்சாரத்தையும் இந்த வஜ்ரா ஆயுதம் வெளியேற்றும். இத்தகைய ஆயுதம் பாதுகாப்புப் படையினருக்கு மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்கோ, தனியார் நிறுவனங்களுக்கோ விற்கப்படாது என்றும் வஜ்ரா ஆயுதத்தை தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: