மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முடிவுக்கட்ட சட்டத்திருத்தம் - மத்திய அரசு

தூய்மை பணியாளர்களுக்கு மாற்றாக தூய்மை கருவிகள் வாங்குவதற்கான தொகையை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை வழங்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முடிவுக்கட்ட சட்டத்திருத்தம் - மத்திய அரசு
மாதிரி படம்
  • Share this:
மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முடிவு கட்டும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நவம்பர் 19ம் தேதி உலக கழிவறை தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நாளில், மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் நெடுங்காலமாக அபாயகரமான தொழிலாக கருதப்படும் மனிதக் கழிவகற்றும் பணியை முழுமையாக தடை செய்ய, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும், தூய்மை பணியாளர்களுக்கு மாற்றாக தூய்மை கருவிகள் வாங்குவதற்கான தொகையை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை வழங்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.மனித கழிவுகளை மனிதனே அள்ளும்போது நிகழும் உயிரிழப்புகளில் 2013-2018 வரை முதலிடம் பிடித்த தமிழகம், மீண்டும் 2020ல் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது என்று மு.க.ஸ்டாலின் அறிக்யைின் மூலம் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading