சட்டசபைத் தேர்தல் தேதிகளை முடிவு செய்ய பிப்ரவரி 23-ம் தேதி கூடுகிறது தேர்தல் ஆணைய குழு

சட்டசபைத் தேர்தல் தேதிகளை முடிவு செய்ய பிப்ரவரி 23-ம் தேதி கூடுகிறது தேர்தல் ஆணைய குழு

தேர்தல் ஆணையம்

தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம் வரும் 23 ஆம் தேதி கூடுகிறது.

 • Share this:
  ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம் வரும் 23 ஆம் தேதி கூடுகிறது.

  இந்த கூட்டத்தில் எத்தனை கட்டமாக தேர்தலை நடத்துவது, எந்தெந்த மாநிலங்கள் எந்தெந்த கட்டதில் தேர்தலை சந்திக்கும், வாக்குச்சாவடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாகவும், முழு ஆணைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.அதன் பின்னர், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

  கடந்த 9 ஆம் தேதி முதல் 15 வரை தமிழகம், கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் 18ஆம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர், முதற்கட்டமாக சிஆர்பிப், பிஎஸ்எப் உள்ளிட்ட 200 கம்பெனி மத்தியப் படைகளை அனுப்பப்பட உள்ளது.

  அதில் 125 கம்பெனி மேற்கு வங்கத்துக்கும், தமிழகத்துக்கு 45 கம்பெனியும், அசாமுக்கு 40 கம்பெனி,
  கேரளாவுக்கு 30 கம்பெனியும், புதுச்சேரிக்கு 10 கம்பெனியும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவர்கள் அனைவரும் வரும் 25 ஆம் தேதி முதல் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: