முகப்பு /செய்தி /இந்தியா / பாஜகவை தோற்கடிக்க சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு கரம் நீட்டிய ஓவைசி கட்சி

பாஜகவை தோற்கடிக்க சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு கரம் நீட்டிய ஓவைசி கட்சி

AIMIM கட்சி தலைவர் அசாதூதின் ஓவைசி

AIMIM கட்சி தலைவர் அசாதூதின் ஓவைசி

எங்களின் கட்சி கொள்கைகள் சிவசேனாவுடன் முரண்பட்டு இருந்தாலும் பொது நோக்கில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளோம் என ஏஐஎம்ஐஎம் கட்சி தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடு முழுவதும் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஏழு பேர் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக கடந்த 22 ஆண்டுகளுக்குப் பின் வாக்குப்பதிவு முறை தற்போது நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், வாக்குப் பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின் மக்களவை உறுப்பினரும், மகாராஷ்டிரா மாநில தலைவருமான இம்தியாஸ் ஜலீல் தனது ட்விட்டர் பதிவில், " தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் ஏஐஎம்ஐஎம் கட்சி உறுப்பினர்கள் மகாவிகாஸ் அகாதி கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளது. எங்களின் கட்சி கொள்கைகள் சிவசேனாவுடன் முரண்பட்டு இருந்தாலும் பொது நோக்கில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளோம். மேலும், எங்கள் எம்எல்ஏக்களின் தூலியா மற்றும் மலேகான் ஆகிய தொகுதிகளில் மாநில அரசு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டி கோரிக்கை வைத்துள்ளோம். எனவே, எங்கள் இரு எம்எல்ஏக்களும் காங்கிரஸ் வேட்பாளரான இம்ரான் பிரதாப்காரிக்கு வாக்களிக்க உள்ளனர்" எனக் கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் எம்பியான அசாதுதீன் ஓவைசியின் தனது கட்சியை மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார் என பல்வேறு மாநிலங்களில் வளர்க்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். எனவே, மேற்கண்ட மாநிலங்களில் தனித்து களமிறங்கி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தாங்கள் தான் மாற்று என கூறி வருகிறது.

இதையும் படிங்க: 4 மாநிலங்களில் இன்று மாநிலங்களவைத் தேர்தல்.. குதிரை பேரத்தை தடுக்க எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைப்பு

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது முதல்முதலாக பாஜக வேட்பாளரை தோற்கடிக்க சிவசேனா தலைமையிலான கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தர AIMIM கட்சி முடிவு செய்துள்ளது.

First published:

Tags: Asaduddin Owaisi, Maharastra, Rajya Sabha Election