vaccination Centers | இந்தியாவில் கூடுதலாக 2 தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் விரைவில் அமைக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

தடுப்பூசி

ஐதராபாத், புனேவில் புதிதாக இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கூடுதலாக இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கெனவே இமாச்சலபிரதேசம் Kasauli-யிலும், நொய்டாவிலும் தடுப்பூசி ஆய்வகங்கள் இருக்கும் நிலையில், தற்போது ஐதராபாத் மற்றும் புனேவில் கூடுதலாக ஆய்வகங்கள் திறக்கப்படுகிறது. தடுப்பூசிக்கான கொள்முதல் மற்றும் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, கூடுதல் ஆய்வகங்கள் மூலம் விரைவான சோதனை மற்றும் தடுப்பூசி பயன்பாட்டுக்கான முன் - சான்றிதழுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... தமிழகத்தில் எங்கெல்லாம் தடுப்பூசி இன்று போடப்படாது.. விவரம்

    இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டின் தேவைக்கேற்ப புதிய கொரோனா தடுப்பூசிகள் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

     
    Published by:Vaijayanthi S
    First published: