மத்திய பிரதேசத்தில் மது-வுக்கு தடை: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அதிரடி திட்டம்!!

மத்திய பிரதேசத்தில் மது-வுக்கு தடை: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அதிரடி திட்டம்!!

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

மக்களை மது குடிப்பதில் இருந்து காத்து நல்ல மாநிலம் என்ற நிலையை எட்ட பாடுபடுவோம்.

  • Share this:
மது இல்லா மாநிலம் என்ற நிலையை அடையும் நோக்கில் மத்திய பிரதேச அரசு பயணித்து வருவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மது விலக்கு மட்டும் அல்லாமல் மது குடிப்போர் மாநிலத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் கத்னி எனும் பகுதியில் அரசுத் திட்டங்கள் துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இதனை தெரிவித்துள்ளார்.

"மத்திய பிரதேசத்தில் மதுவை தடை செய்ய திட்டமிட்டுள்ளோம். மத்திய பிரதேசத்தை மது இல்லா மாநிலம் ஆக்க விரும்புகிறோம். மது விலக்கினால் மட்டுமே இது சாத்தியம் ஆகிவிடாது. மது குடிப்போர் இருக்கும் வரை மது விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கும். மது குடிப்பதால் ஏற்படும் தீங்கினை எடுத்துரைப்பதற்காக மதுபானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை விரைவில் துவக்க இருக்கிறோம். இதன் மூலம் மக்களை மது குடிப்பதில் இருந்து காத்து நல்ல மாநிலம் என்ற நிலையை எட்ட பாடுபடுவோம்.

வீடு இல்லாத ஏழைகள் வீடுகள் கட்டிக்கொள்வதற்கு நிதி உதவி வழங்கப்படும். 5 லட்ச ரூபாய் வரையில் மருத்துவக் காப்பீடு கிடைக்கும் அயூஷ்மான் பாரத் அட்டைகள் 3,25,000 பேருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது."

மேலும் "பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவோருக்கு தூக்கு தண்டனை அளிக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் பெற்றிருக்கிறது. இதுவரை 37 பேருக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. இதில் 2 பேர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருக்கின்றனர்" என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

இதே போல அடுத்த 3 ஆண்டுகளில் கத்னி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் சப்ளை குழாய் மூலம் தரப்படும். எனவும் கத்னியில் ஓடும் ஆற்றின் இருகரைகளும் மேம்படுத்தி இதன் எழில் மேம்படுத்தப்படும் எனவும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். ஆத்ம நிர்பார் மத்திய பிரதேசத்தின் கீழ் பல்வேறு திட்டங்களையும் அவர் துவக்கி வைத்தார்.
Published by:Arun
First published: