TNPSC Departmental Exam அறிவிப்பு வெளியாகியுள்ளது... மேலும் அறிந்துகொள்ள இங்கே படியுங்கள்...!
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள தேர்வர்கள் 08.01.2021 முதல் 29.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாதிரி படம்
- News18
- Last Updated: January 11, 2021, 4:39 PM IST
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தர பதிவு துறைத்தேர்வுகள் டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது TNPSC ஆனது 2020 ஆம் ஆண்டிற்கான துறைத்தேர்வுகளை 14.02.2021 முதல் 21.02.2021 வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் அப்ளை செய்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) 2019 ல் நடைபெற்ற Departmental Examinationsகளுக்கு ஒரு முறை பதிவை (One Time Registration) அறிமுகப்படுத்தியது. இப்போதும் இந்த முறை தொடர்கிறது.
எனவே, விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் முன், தங்கள் விவரங்களை ஒரு முறை பதிவில் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் (Aadhaar Number) விவரங்கள் டிப்பார்ட்மன்ட் ஒருமுறை பதிவுடன் (Departmental One Time Registration) கட்டாயமாக இணைக்கப்படும்,” மேலதிக தகவல்களுக்கு TNPSC ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படியுங்கள். "தேர்வர்கள் ஏற்கனவே ஒரு முறை பதிவில் (One Time Registration) விவரங்களை வழங்கியவர்கள் ஆதார் விவரங்களை மட்டும் உள்ளிட்டு புதுப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். புதுப்பிப்புகளுக்கு ஆன்லைன் அல்லாத முறைகளை யாரேனும் பின்பற்றினால் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது, மேலும் விண்ணப்பச் செலவு அவர்களுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் அவை நிராகரிக்கப்படும், ”என்று TNPSC அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission): முக்கிய தேதிகள்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: ஜனவரி 8, 2021ஆன்லைன் விண்ணப்பத்திற்க்கான கடைசி தேதி: ஜனவரி 29, 2021 (இரவு 11.59)
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை: ஆன்லைன்
TNPSC துறை தேர்வுக்கான வயது வரம்பு:
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 16 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
TNPSC துறை தேர்வுகான விண்ணப்ப கட்டணம்(TNPSC Departmental Exam):
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ .200 தேர்வுக் கட்டணத்தையும் ஆன்லைனில் ரூ .300 பதிவு கட்டணத்தையும் ஆன்லைன் வங்கி / டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும்.
TNPSC துறை தேர்வுக்கான தேர்வு மையம்:
விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தின் தலைநகரில் தான் தேர்வு எழுத வேண்டும், வேறு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டுமெனில் அதற்குத் தேர்வாணையத்தின் தனிப்பட்ட அனுமதி பெறவேண்டும், இந்த நிபந்தனை பணியில் இல்லாதவர்களுக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் பொருந்தாது.
Also read... மாணவனின் குரலுக்கு செவிசாய்த்த ஒடிசா அரசு - பேருந்து நேரத்தை உடனடியாக மாற்றிய அதிகாரிகள்!
தேர்வு மையத்தை மாற்றுதல்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த பின்னர் தேர்வு மையம் மாற்றம் குறித்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
TNPSC Departmental Test தேர்வு கால அட்டவணை:
முற்பகல் தேர்வு காலை 9.30 மணிக்கும் பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் தொடகும், விண்ணப்பதாரர்கள் முற்பகல் தேர்வுக்கு காலை 9.00 மணிக்கும் பிற்பகல் தேர்வுக்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வுகூடத்திற்குள் வருகை புரிய வேண்டும். தேர்வுகள் தொடங்கிய பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் அதாவது முற்பகல் 9.30 மணிக்கு பிறகும் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் எவரும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
மேலும் அப்ளை செய்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) 2019 ல் நடைபெற்ற Departmental Examinationsகளுக்கு ஒரு முறை பதிவை (One Time Registration) அறிமுகப்படுத்தியது. இப்போதும் இந்த முறை தொடர்கிறது.
எனவே, விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் முன், தங்கள் விவரங்களை ஒரு முறை பதிவில் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் (Aadhaar Number) விவரங்கள் டிப்பார்ட்மன்ட் ஒருமுறை பதிவுடன் (Departmental One Time Registration) கட்டாயமாக இணைக்கப்படும்,” மேலதிக தகவல்களுக்கு TNPSC ன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படியுங்கள். "தேர்வர்கள் ஏற்கனவே ஒரு முறை பதிவில் (One Time Registration) விவரங்களை வழங்கியவர்கள் ஆதார் விவரங்களை மட்டும் உள்ளிட்டு புதுப்பிக்க வேண்டும்.