ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார்.
தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் நார்த் ப்ளாக்கில் உள்ள நிதியமைச்சகம் அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது மத்திய நிதி துறை செயலர் TV சோமநாதன் மற்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த மாத இறுதியில் மதுரையில் நடைபெற உள்ள GST கவுன்சில் குழு கூட்டத்தின் தேதி, முன்னேற்பாடு நடவடிக்கைகள், உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் அத்தியாவசிய பொருட்களின் மீதான GST வரி விதிப்பு திரும்பப் பெற வேண்டும் எனவும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை விரைந்து வழங்க வேண்டும் எனவும் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக நடைபெற உள்ள GST கவுன்சில் குழு கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
ஜி.எஸ்.டியின் இந்த 48வது கூட்டம் தமிழக நிதி அமைச்சரின் அழைப்பின் பேரில் மதுரையில் நடைபெறும் என கடந்த ஜூன் 29அம் தேதியன்றே கூட்டத்தின் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மேலும் இந்த கூட்டதில் சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் விளையாட்டு மற்றும் குதிரை பந்தயம் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கபடும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GST council, Minister Palanivel Thiagarajan, Nirmala Sitharaman