முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: கேரள முதல்வரின் கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: கேரள முதல்வரின் கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு
முல்லைப்பெரியாறு அணை
  • News18
  • Last Updated: August 16, 2018, 4:21 PM IST
  • Share this:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு கேரள முதல்வர் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழை அதிகமாக உள்ளதால் வழக்கத்தை விட முல்லைப்பெரியாறு அணியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து, உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த அணையின் பராமரிப்புப் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருவதால், நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.


ஆனால், இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக கேரள பொதுப்பணித் துறைச் செயலாளரிடம் தமிழக பொதுப் பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 142 அடி நீரை தேக்குவதாகவும் அதற்கு மேல் வரும் நீரை அப்படியே வெளியேற்ற உள்ளதாகவும் எஸ்.கே.பிரபாகர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
First published: August 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading